Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

ஜர்னி ஆஃப் லவ் 18+ (மலையாளம்)

பள்ளிப் பருவத்துக் காதலைப் பற்றி சொல்லும் படம் இது. அகிலும் (நெல்சன் கே.கபூர்), ஆதிரையும் (மீனாட்சி தினேஷ்) பள்ளியில் படிக்கும் காலத்திலேயே காதலிக்கின்றனர். ஆதிரையின் தந்தை ரவீந்திரன், அப்பகுதியில் அதிக செல்வாக்கு கொண்ட அரசியல்வாதி மற்றும் சாதி வெறியர். தன் மகள் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த அகிலைக் காதலிப்பது அவருக்குப் பிடிக்கவில்லை. இதனால் அகிலும், ஆதிரையும் வீட்டை விட்டு ஓடிப்போய் திருமணம் செய்கின்றனர். தன் மகள் மைனர் என்று ஆதிரையின் தந்தை வழக்கு போடுகிறார். அவருக்கு 18 வயதாக 6 நாட்கள் இருக்கிறது. இந்நிலையில், அடுத்து என்ன நடக்கிறது என்பதைச் சொல்லும் படம் இது.

ஒரு சாதாரண கதை, சாதாரண திரைக்கதையில் எளிமையான முறையில் சொல்லப்பட்டுள்ளது. பள்ளிப் பருவத்து ஈர்ப்பை காதல் என்று சொல்லி, அதற்கு ஆதரவாக நிற்கிறது படம். என்றாலும், தந்தையின் சாதி வெறிதான் அவர்களின் காதலை உறுதியாக்குகிறது என்று சொல்வதால், ஓரளவு அது ஏற்புடையதாகிறது. நெல்சன் கே.கபூரும், மீனாட்சி தினேஷும் மிகவும் இயல்பாக நடித்துள்ளனர். நண்பனாக வரும் மேத்யூ தாமஸ், தனது பங்கை நிறைவாகச் செய்துள்ளார். கடந்த ஜூலை மாதத்தில் தியேட்டர்களில் வெளியான இப்படம், தற்போது சோனி லிவ்வில் வெளியாகியுள்ளது. தமிழிலும் பார்க்கலாம்.