இந்திய பணக்கார நடிகர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்து வந்த ஷாருக்கான், முதல்முறையாக உலக பணக்கார நடிகர்கள் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளார். சமீபத்தில் வெளியான ஒரு பட்டியலில், 1.4 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் 12,490 கோடி ரூபாய்) சொத்து மதிப்புடன் ஷாருக்கான் முதலிடம் பிடித்துள்ளார். 1.3 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் டெய்லர் ஸ்விப்ட் 2வது இடமும், 1.2 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் ஜெர்ரி செய்ன்பெல்ட் 3வது இடமும், 720 மில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் அமெரிக்க பாடகி செலினா கோம்ஸ் 4வது இடமும் பிடித்துள்ளனர். டாப்-5 இந்திய பணக்காரர்கள் பட்டியலில் ஷாருக்கான் முதலிடம் பிடித்துள்ளார்.
7,790 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் ஜூஹி சாவ்லா 2வது இடமும், 2,160 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் ஹிரித்திக் ரோஷன் 3வது இடமுaம், 1,880 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் கரண் ஜோஹர் 4வது இடமும், 1,630 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் அமிதாப் பச்சன் 5வது இடமும் பிடித்துள்ளனர்.