Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

படத்தை பார்த்ததுமே அப்பாவின் ஞாபகம் வரும்: காளி வெங்கட் உருக்கம்

சென்னை: ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் வழங்க, மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ள படம், ‘மெட்ராஸ் மேட்னி’. மொமெண்ட் எண்டர்டெயின்மெண்ட் நிர்வாக தயாரிப்பு பணிகளை மேற்கொண்டுள்ளது. ஆனந்த் ஜி.கே ஒளிப்பதிவு செய்துள்ளார். கே.சி.பாலசாரங்கன் இசை அமைத்துள்ளார். வரும் ஜூன் 6ம் தேதி படம் திரைக்கு வருகிறது. கார்த்திகேயன் மணி எழுதி இயக்கியுள்ளார். சத்யராஜ், காளி வெங்கட், ரோஷிணி ஹரிப்பிரியன், ஷெல்லி, விஷ்வா, ஜார்ஜ் மரியான், நடித்துள்ளனர். படம் குறித்து காளி வெங்கட் உருக்கமாக பேசியதாவது:

நிறைய படங்களில் குணச்சித்திர கேரக்டரில் நடிக்கிறேன். திடீரென்று கதையின் நாயகனாக நடித்தால், பிறகு உள்ளதும் போச்சுடா என்ற கதையாகிவிடுமே என்று பயந்தேன். இக்கதை ஒவ்வொருவருக்கும் அவரது அப்பாவை பற்றிய ஞாபகத்தை கொண்டு வரும். இதை அவரவர் உணர்ந்திருப்பார்கள். ஒருகட்டத்தில் எல்லா அப்பாக்களும் தங்களது பிள்ளைகள் தங்களிடம் இருந்து பிரிந்து செல்வதை உணர்வார்கள். இதை படம் பார்த்த பிறகு உணர்வீர்கள். மிடில் கிளாஸ் வாழ்க்கையை ஒரு மாறுபட்ட கதைக்களத்தில் அற்புதமாக சொல்லியிருக்கிறோம்.