சென்னை: மும்பையை சேர்ந்த இஷா தல்வார், கடந்த 2012ல் தேசிய விருது வென்ற ‘தட்டத்தின் மறயத்து’ என்ற மலையாள படத்தில் அறிமுகமானார். பிறகு மலையாளம், தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் பிசியாக நடித்து வந்தார். தற்போது அவருக்கு புதுப்பட வாய்ப்புகள் குறைந்துவிட்டன.
எனினும், கேரளாவின் பிரசித்தி பெற்ற கலையான களறி பயிற்சி பெற்று வருகிறார். தமிழில் பத்ரி இயக்கிய ‘தில்லு முல்லு’, மித்ரன் ஆர்.ஜவஹர் இயக்கிய ‘மீண்டும் ஒரு காதல் கதை’, ஆர்ஜே பாலாஜி நடித்த ‘ரன் பேபி ரன்’ ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
இந்த நிலையில், விரைவில் அவர் நடிக்கும் ஒரு புதிய படத்துக்காக களரி கற்று வருகிறார். கேரளாவில் களரி கற்று கொடுப்பவர்கள் மற்றும் இதை கற்கும் மாணவர்களுடன் இருக்கும் போட்டோக்களை சோஷியல் மீடியாவில் வெளியிட்டுள்ள இஷா தல்வார், ‘களரி கற்று கொடுக்கும் சில ஆசிரியர் களுக்கு என் நன்றி’ என்று குறிப்பிட்டு இருக்கிறார்.