கமல்ஹாசனின் ‘வேட்டையாடு விளையாடு’ உள்பட சில தமிழ் படங்களில் ஹீரோயினாக நடித்தவர், கமாலினி முகர்ஜி. இந்தி, கன்னடம், மலையாளம், தெலுங்கு, பெங்காலி ஆகிய மொழிகளில் சில படங்களில் நடித்துள்ள அவர், 2014ல் தெலுங்கில் ராம் சரண் நடிப்பில் வெளியான ‘கோவிந்துடு அந்தரிவாடேலே’ என்ற படத்தில் நடித்த பிறகு தெலுங்கில் புதுப்படத்தில் நடிக்கவில்லை. தமிழில் ‘இறைவி’, மலையாளத்தில்...
கமல்ஹாசனின் ‘வேட்டையாடு விளையாடு’ உள்பட சில தமிழ் படங்களில் ஹீரோயினாக நடித்தவர், கமாலினி முகர்ஜி. இந்தி, கன்னடம், மலையாளம், தெலுங்கு, பெங்காலி ஆகிய மொழிகளில் சில படங்களில் நடித்துள்ள அவர், 2014ல் தெலுங்கில் ராம் சரண் நடிப்பில் வெளியான ‘கோவிந்துடு அந்தரிவாடேலே’ என்ற படத்தில் நடித்த பிறகு தெலுங்கில் புதுப்படத்தில் நடிக்கவில்லை.
தமிழில் ‘இறைவி’, மலையாளத்தில் ‘புலிமுருகன்’ உள்பட சில படங்களில் நடித்த அவர், பிறகு நடிப்பை விட்டு ஒதுங்கினார். இந்நிலையில் அவர் அளித்துள்ள பேட்டியில், ‘நான் நடித்த ‘கோவிந்துடு அந்தரிவாடேலே’ படத்தின் படப்பிடிப்பு நன்றாகத்தான் நடந்தது. ஆனால், படம் ரிலீசானபோது என் கதாபாத்திரத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். படத்தில் எனது கதாபாத்திரம் முக்கியமானதாக இல்லாமல், தேவையில்லாதது போன்று இருந்தது.
எடிட்டிங்கில் அதை நீக்கிவிட்டனர். எதற்காக இதில் நடித்தோம் என்ற எண்ணத்தை அப்படம் ஏற்படுத்தி விட்டது. இதற்கு என்னுடன் நடித்த நடிகர்களோ, படக்குழுவினரோ காரணம் இல்லை. அதனால்தான் தெலுங்கு படங்களில் நடிப்பதை நான் நிறுத்திவிட்டேன்’ என்று கூறியுள்ளார்.