Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

நவ.19ல் காந்தா ரிலீஸ்

சென்னை: துல்கர் சல்மான் நடிக்கும் :காந்தா’ படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது. இப்படம் கடந்த செப்டம்பர் மாதமே திரைக்கு வருவதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டது. செல்வமணி செல்வராஜ் எழுதி இயக்கியுள்ள இந்தப் படத்தை, துல்கர் சல்மானின் வேஃபேரர் ஃபிலிம்ஸ் மற்றும் ராணா தகுபதியின் ஸ்பிரிட் மீடியா இணைந்து தயாரித்துள்ளன. துல்கர் சல்மான், ஜோம் வர்கீஸ், ராணா தகுபதி, மற்றும் பிரசாந்த் பொட்லூரி ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். வருகிற நவம்பர் 14 அன்று இப்படம் உலகம் முழுவதும் வெளியாகும் என அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இப்படத்திற்கு டானி சான்செஸ் லோபஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார், ஜானு சந்தர் இசையமைத்துள்ளார்.