சென்னை: கன்னடக் கலைஞர்கள் கூட்டணியில் கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என ஐந்து மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக உருவாகி இருக்கும் ‘கரிகாடன்’ படத்தின் டீசர் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. டீசர் வெளியான குறுகிய காலத்திலேயே இரண்டு மில்லியன் பார்வைகளைப் பெற்று புதிய சாதனை படைத்துள்ளது. படத்தின் டீசர் பார்வையாளர்களிடம் அதிர்வலைகளை ஏற்படுத்திக் கவனிக்க வைக்கிறது.
ஆக்ஷனும் அமானுஷ்யமும் நிறைந்த ஒரு பரபரப்பான திரைப்படமாக ‘கரிகாடன்’ உருவாகியுள்ளது. இப்படத்தில் காடா நடராஜ், நிரிக்ஷா ஷெட்டி, ரித்தி, மஞ்சு சுவாமி, யாஷ் ஷெட்டி,கோவிந்த கவுடா, திவாகர், கிலாடி சூர்யா, டி.ராகேஷ் பூஜாரி, விஜய் சந்தூர், சந்திரபிரபா, கரிசுப்பு, கிரி, பாலராஜாவாடி, மாஸ்டர் ஆர்யன் மற்றும் பலர் நடித்துள்ளனர். திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் கில்லி வெங்கடேஷ். இசை: அதிஷய் ஜெயின், மற்றும் ஷஷாங்க் சேஷகிரி, ஒளிப்பதிவு: ஜீவன் கவுடா, எடிட்டிங் தீபக் சி.எஸ். ரித்தி எண்டர்டெயின்மெண்ட்ஸ் சார்பில் தீப்தி தாமோதர் தயாரித்துள்ளார். இணைத் தயாரிப்பு: ரவிக்குமார் எஸ்.ஆர்.
