Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

கார்த்தியின் மார்ஷல்

சென்னை: வெற்றிமாறனின் உதவி இயக்குனரும் அசுரன் மற்றும் விடுதலை ஆகிய படங்களின் மூலம் நடிகராகவும் அறியப்பட்டவர் தமிழ். ஜெய்பீம் படத்தில் கொடூர போலீஸ்காரராக நடித்திருந்தார். அவர் இயக்கத்தில் நடிகர் விக்ரம் பிரபு நடித்த ‘டாணாக்காரன்’ திரைப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடியில் கடந்த 2021 ஆம் ஆண்டு ரிலீஸாகி வெற்றிப் படமாக அமைந்தது. இந்நிலையில் அவர் தனது அடுத்த படத்தில் கார்த்தியை இயக்குகிறார். இந்த படத்தை ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. படத்துக்கு மார்ஷல் எனப் பெயர் வைக்கப்பட்டு போஸ்டர் ஒன்று வெளியாகியுளது. படத்தில் கார்த்தி ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்ய, சாய் அபயங்கர் இசையமைக்கிறார். கப்பலில் நடக்கும் கதையாக இப்படம் உருவாகிறது.