Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

கீர்த்தி சுரேஷை மயக்கிய நானி

தனது நீண்ட நாள் காதலரான ஆண்டனி தொட்டிலை, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்துகொண்ட கீர்த்தி சுரேஷ், மீண்டும் நடிப்பில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். தமிழில் அவரது நடிப்பில் ‘ரிவால்வர் ரீட்டா’, ‘கண்ணிவெடி’ ஆகிய படங்கள் திரைக்கு வர தயாராகி விட்டன. இந்நிலையில், ‘உப்பு கப்புரம்பு’ என்ற வெப்தொடரின் புரமோஷனுக்காக பேட்டியளித்த கீர்த்தி சுரேஷிடம் ஒரு நிருபர், ‘மீண்டும் கொரோனா லாக்டவுன் வந்தால், யாருடன் தங்க விரும்புவீர்கள்?’ என்று கேட்டார்.

அதற்கு பதிலளித்த கீர்த்தி சுரேஷ், ‘அப்படியொரு நிலை வந்தால், நடிகர் நானி, அவரது மனைவி அஞ்சு, மகன் ஜூன்னு ஆகியோருடன் இருக்க விரும்புவேன். அங்கு இருந்தால் நேரம் போவதே தெரியாது. மனம் நிம்மதியாகவும் இருக்கும்’ என்றார். நானி படத்தில் நடித்தபோதே இருவரும் குடும்ப நண்பர்களாக மாறிவிட்டனர். பேட்டிகளில் நானியின் மகனை பற்றி கீர்த்தி சுரேஷ் பேசிய விஷயங்கள் வெளியானது. நானியும், கீர்த்தி சுரேஷும் பேட்டி தரும்போது அடித்த லூட்டிகளும் வைரலானது. நானி கூட சில பேட்டிகளில், ‘கீர்த்தி சுரேஷ் எங்கள் வீட்டுக்கு வந்தால், எனது பையன் அவரை ‘ஆன்ட்டி ஆன்ட்டி’ என்று சொல்லி நிறைய சேட்டைகள் செய்வான்’ என்று தெரிவித்திருந்தார்.