சென்னை: கடந்த 2000ம் ஆண்டில் ஏ.எம்.ரத்னம் தயாரிக்க, எஸ்.ஜே.சூர்யா எழுதி இயக்கிய படம், ‘குஷி’. விஜய், ஜோதிகா, மும்தாஜ், ஷில்பா ஷெட்டி நடிப்பில் ஹிட்டான இப்படம், 25 ஆண்டுகளுக்கு பிறகு ரீ-ரிலீஸ் ஆகிறது. வரும் 26ம் தேதி சக்தி பிலிம் பேக்டரி சார்பில் சக்திவேலன் வெளியிடுகிறார். இதுகுறித்த பத்திரிகையாளர் சந்திப்பில் ஏ.எம்.ரத்னம், சக்திவேலன் கலந்துகொண்டனர். அப்போது எஸ்.ஜே.சூர்யா பேசியதாவது:விஜய்யிடம் இந்த படத்தின் கதை கூறியபோது, அவரிடம் எந்த ரியாக்ஷனும் இல்லை. வேறு கதை சொல்லவா என்றபோது, இல்லை இதையே செய்யலாம் என்றார்.
‘மொட்டு ஒன்று’ என்ற பாடலை மெட்டுக்கு எழுதாமல், அந்த பாட்டுக்கு மெட்டு அமைத்து கொடுத்தார். விஜய், ஜோதிகா, விவேக், ஒளிப்பதிவாளர் ஜீவா, இசை அமைப்பாளர் தேவா ஆகியோர் சிறப்பாக பணியாற்றினார்கள். நான் நடிகனாக வேண்டும் என்றுதான் திரைத்துறைக்கு வந்தேன். அதனால், படம் இயக்குவதை நிறுத்திவிட்டு நடிக்க ஆரம்பித்துவிட்டேன்.