Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

கியாரா பிகினி காட்சிகள் நீக்கம்

அனைத்து தரப்பு ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்க்கும் ஸ்பை ஆக்‌ஷன் திரில்லர் படமான ‘வார் 2’, வரும் 14ம் தேதி திரைக்கு வருகிறது. பான் இந்தியா படமான இதை அயன் முகர்ஜி இயக்கியுள்ளார். கடந்த 2019ல் ஹிரித்திக் ரோஷன், டைகர் ஷெராஃப் நடித்த ‘வார்’ என்ற இந்திப் படத்தின் 2வது பாகமாக இப்படம் உருவாகியுள்ளது. ஹிரித்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர், கியாரா அத்வானி நடித்துள்ளனர். பிரீத்தம் இசையில் ‘ஆவான் ஜாவன்’ என்ற பாடல் வெளியாகி ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. இப்பாடலில் கியாரா அத்வானி பிகினி உடையில் தோன்றியிருப்பார். அதுதொடர்பான போட்டோ மற்றும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்தது.

இந்நிலையில் படத்தை பார்த்த சென்சார் குழுவினர், படத்தில் இருந்து ஆபாசமான காட்சிகளை நீக்க வேண்டும் என வலியுறுத்தினர். அதன்படி, ‘ஆவான் ஜாவன்’ என்ற பாடலில் கியாரா அத்வானி நடித்திருந்த 9 விநாடி கவர்ச்சி காட்சிகளை நீக்க படக்குழு சம்மதம் தெரிவித்து நீக்கியது. இதையடுத்து படத்துக்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. ஆனால், பிகினி காட்சிகளை நீக்கியதால் கியாரா அத்வானி ரசிகர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.