Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

ஹீரோவுக்கு ஐஸ் வைத்த கியாரா

பாலிவுட் டைரக்டர் அயன் முகர்ஜி இயக்கத்தில் ஹிரித்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர், கியாரா அத்வானி நடித்துள்ள படம், ‘வார் 2’. வரும் ஆகஸ்ட் 15ம் தேதி திரைக்கு வரும் இப்படத்தின் டீசர் வெளியாகி, ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு மும்பையில் விறுவிறுப்பாக நடந்து வந்தது. தற்போது முழு படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இதையடுத்து படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர். அந்த போட்டோக்களை தனது சோஷியல் மீடியாவில் பகிர்ந்துள்ள கியாரா அத்வானி, இதில் ஹிரித்திக் ரோஷனுடன் இணைந்து நடித்த அனுபவம் குறித்து நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், ‘நான் ஹிரித்திக் ரோஷனுடன் திரையை பகிர்ந்துகொண்டது, என் வாழ்நாளிலேயே மறக்க முடியாத ஒரு பேரனுபவமாக இருக்கிறது.

தயாரிப்பாளர் ஆதித்யா சோப்ரா, டைரக்டர் அயன் முகர்ஜி, இன்னொரு ஹீரோ ஜூனியர் என்டிஆர் மற்றும் அற்புதமான படக்குழுவினர் அனைவரும் இணைந்து, ‘வார் 2’ என்ற பான் இந்தியா படத்துக்கு உயிர் கொடுத்ததை இந்த உலகம் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறது. அவர்களை போலவே நானும் இப்படத்தின் வெளியீட்டுக்கு காத்திருக்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார். பாலிவுட்டில் இதுவரை திரைக்கு வந்த படங்களில், மிகப் பிரமாண்டமான ஸ்பை ஆக்‌ஷன் திரில்லர் படங்களில் ஒன்றாக ‘வார் 2’ படம் இருக்கும் என்று கூறப்படுகிறது. ஹீரோவுக்கு கியாரா அத்வானி ஐஸ் வைத்து வெளியிட்டுள்ள பதிவு வைரலாகி வருகிறது.