Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

எஸ்.ஜே.சூர்யா இயக்கி நடிக்கும் கில்லர்

சென்னை: எஸ்.ஜே.சூர்யா மீண்டும் இயக்குனராக களமிறங்கி இருக்கிறார். அவர் இயக்கி நடிக்கும் ‘கில்லர்’ படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று துவங்குகிறது. படம் குறித்து எஸ்.ஜே.சூர்யா கூறும்போது, “கில்லர் எனது கனவுப்படம். சில வருடங்களாகவே எழுதி வந்தேன். இது மக்களை ‘குஷி’ படுத்த போற படம்.

இப் படத்தை  கோகுலம் மூவிஸ் கோகுலம் கோபாலனுடன் இணைந்து, ஏஞ்சல் ஸ்டூடியோஸ் பட நிறுவனம் மூலம் பான் இந்தியா படமாக பிரமாண்டமாக உருவாக்குவதில் பெருமைக் கொள்கிறேன்’’ என்றார். ஐந்து மொழிகளில் தயாராகும் இப்படத்தின் படப்பிடிப்பை இந்தியாவிலும், மேலும் சில முக்கியமான காட்சிகள் மெக்ஸிகோ நாட்டிலும் மடமாக்கப் படுகிறது. இப்படத்தின் நடிகர், நடிகையர்கள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் பற்றிய விபரம் அடுததுத்து வெளியாகும்.