சங்கர் ஏழுமலை என்ற இயற்பெயர் கொண்ட நகைச்சுவை நடிகர் கிங்காங் (53), கலைப்புலி ஜி.சேகரன் இயக்கிய ‘ஊரை தெரிஞ்சிகிட்டேன்’ என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். இப்படம் கடந்த 1988 ஜனவரி 15ம் தேதி திரைக்கு வந்தது. கடந்த 37 வருடங்களாக தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் நூற்றுக்கணக்கான படங்களில்...
சங்கர் ஏழுமலை என்ற இயற்பெயர் கொண்ட நகைச்சுவை நடிகர் கிங்காங் (53), கலைப்புலி ஜி.சேகரன் இயக்கிய ‘ஊரை தெரிஞ்சிகிட்டேன்’ என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். இப்படம் கடந்த 1988 ஜனவரி 15ம் தேதி திரைக்கு வந்தது. கடந்த 37 வருடங்களாக தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் நூற்றுக்கணக்கான படங்களில் நடித்துள்ள அவர், நடிப்புக்காக பல்வேறு விருதுகள் பெற்றுள்ளார். கலைநிகழ்ச்சிகள் நடத்துவதிலும் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். ரஜினிகாந்தின் ‘அதிசயபிறவி’ என்ற படம் அவரை பிரபலமாக்கிய நிலையில், வடிவேலுவின் நகைச்சுவை கூட்டணியில் இணைந்து ஏராளமான படங்களில் காமெடி செய்தார்.
டி.வி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றார். அவருக்கு திருமணமாகி கலா என்ற மனைவி இருக்கிறார். கீர்த்தனா, சாந்திப்பிரியா ஆகிய மகள்களும், துரைமுருகன் என்ற மகனும் இருக்கின்றனர். மூத்த மகள் கீர்த்தனா பி.காம்., எம்.பி.ஏ படித்து முடித்துள்ளார். அவருக்கும், பி.காம்., எம்.பி.ஏ படித்து முடித்து பணியாற்றும் நவீன் என்பவருக்கும் நேற்று திருமணம் நடந்தது. இதில் கிங்காங்குடன் நடித்தவர்கள் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர். இளைய மகள் சாந்திப்பிரியா பி.காம் 2வது ஆண்டும், மகன் துரைமுருகன் 8ம் வகுப்பும் படித்து வருகின்றனர். பொறுப்புள்ள தந்தையாக தனது கடமையை நிறைவேற்றியுள்ள கிங்காங்கிற்கு சோஷியல் மீடியாவில் பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.