சென்னை: கெளதம் தின்னூரி இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, சத்யதேவ், பாக்யஸ்ரீ போர்ஸ் மற்றும் பலர் நடித்திருக்கும் ‘கிங்டம்’ திரைப்படம் உலகம் முழுவதும் ஜூலை 31ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ஆக்ஷன், ஹீரோயிசம், உயர்தர தொழில்நுட்ப தரத்துடன் இந்தப் படம் உருவாகி இருந்தது. இது விஷூவலாக ரசிகர்களை படத்துடன் இணைத்திருக்கிறது. ‘‘ படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது....
சென்னை: கெளதம் தின்னூரி இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, சத்யதேவ், பாக்யஸ்ரீ போர்ஸ் மற்றும் பலர் நடித்திருக்கும் ‘கிங்டம்’ திரைப்படம் உலகம் முழுவதும் ஜூலை 31ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ஆக்ஷன், ஹீரோயிசம், உயர்தர தொழில்நுட்ப தரத்துடன் இந்தப் படம் உருவாகி இருந்தது. இது விஷூவலாக ரசிகர்களை படத்துடன் இணைத்திருக்கிறது. ‘‘ படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. இதற்கு முன்பு பார்த்திராத பிரம்மாண்ட திரையரங்க அனுபவத்தை இந்தப் படம் ரசிகர்களுக்குத் தந்துள்ளது’’ என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர் அவர்கள் தொடர்ந்து கூறும்போது, ‘‘இந்த படம் தமிழ்நாட்டிலும் புதுவையிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இதற்காக தமிழ் ரசிகர்களுக்கு நன்றி. நான்கு நாட்களில் இந்த இரு மாநிலங்களிலும் ரூ.4 கோடி வசூலை படம் ஈட்டியுள்ளது. விஜய் தேவரகொண்டாவுக்கு பெண் ரசிகைகள் அதிகம். அது இந்த படத்துக்கு பெரும் பிளஸ்ஸாக மாறியிருக்கிறது. ஜெர்சி என்ற வெற்றிப் படம் தந்த கௌதம் தின்னூரியின் இயக்கமும் அனிருத்தின் இசையும் படம் விறுவிறுப்பாக அமைய காரணம்’’ என்றனர். இந்த படத்தை தமிழ்நாடு மற்றும் புதுவையில் எஸ்.எஸ்.ஐ. புரொடக்ஷன் வெளியிட்டுள்ளது. விஜய் தேவரகொண்டாவின் படங்களிலே உலகம் முழுவதும் அதிக வசூலை குவித்த படமாக இது மாறியுள்ளது.