Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

‘கிங்டம்’ 2வது பாகம் அறிவிப்பு

கவுதம் தின்னனுரி இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, பாக்ய போர்ஸ், சத்யதேவ், வெங்கடேஷ், ரோகிணி நடிப்பில் வெளியான பான் இந்தியா படம், ‘கிங்டம்’. ரசிகர்களின் அதிக எதிர்பார்ப்புக்கு இடையே வெளியான இப்படம், தற்போது நல்ல விமர்சனங்களை பெற்றுள்ளது. இப்படத்தின் ஓடிடி வெளியீட்டில் பல்வேறு மாற்றங்களை செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. அதாவது, ‘கிங்டம்’ படத்தில் இருந்து நீக்கப்பட்ட ‘ஹிருதயம் லோபலா’ என்ற பாடல் காட்சி மற்றும் சண்டைக்காட்சியை இணைத்து ஓடிடியில் வெளியிடுகின்றனர். ரசிகர்கள் மத்தியில் ‘ஹிருதயம் லோபலா’ என்ற பாடல் அதிக வரவேற்பை பெற்றது.

ஆனால், படம் வெளியானவுடன் இப்பாடல் இல்லாதது குறித்து பலர் அதிருப்தியை வெளிப்படுத்தினர். தற்போது இப்பாடலை ஓடிடியில் இணைக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். ‘கிங்டம்’ படத்தின் அடுத்த பாகத்துக்கான படப்பிடிப்புக்கு முன்பு, ஓடிடி தளத்துக்காக ஒரு படத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளனர். அது முருகன், சேது ஆகிய கதாபாத்திரங்களை மையப்படுத்தி உருவாக்கப்படுகிறது. தொடர்ந்து ‘கிங்டம் 2’ உருவாகும் என்று இயக்குனர் கவுதம் தின்னனுரி தெரிவித்துள்ளார்.