சென்னை: ஜி.வி.பிரகாஷ் குமார் நடித்திருக்கும் 25வது படம், ‘கிங்ஸ்டன்’. இதை அவரே தயாரித்து இசை அமைத்துள்ளார். வரும் மார்ச் 7ம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் திரைக்கு வரும் இப்படம் குறித்து அவர் கூறுகையில், ‘திவ்யபாரதியும், நானும் ‘பேச்சிலர்’ படத்துக்குப் பிறகு மீண்டும் இணைந்துள்ளோம். கமல் பிரகாஷ் எழுதி இயக்கியுள்ளார். தூத்துக்குடி...
சென்னை: ஜி.வி.பிரகாஷ் குமார் நடித்திருக்கும் 25வது படம், ‘கிங்ஸ்டன்’. இதை அவரே தயாரித்து இசை அமைத்துள்ளார். வரும் மார்ச் 7ம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் திரைக்கு வரும் இப்படம் குறித்து அவர் கூறுகையில், ‘திவ்யபாரதியும், நானும் ‘பேச்சிலர்’ படத்துக்குப் பிறகு மீண்டும் இணைந்துள்ளோம். கமல் பிரகாஷ் எழுதி இயக்கியுள்ளார். தூத்துக்குடி பின்னணியில் கடல் மற்றும் கடலுக்கு அடியில் கதை நடக்கிறது. சபிக்கப்பட்ட கடல்புரத்தில் வசிக்கும் மீனவர்கள் சந்திக்கும் பிரச்னை களை மையமாக வைத்து, பிரமாண்ட மான முறையில் படம் உருவாகியுள்ளது. ரசிகர்கள் கொடுக்கும் வரவேற்பைப் பொறுத்து 2வது பாகமும், 3வது பாகமும் உருவாக்குவதைப் பற்றி முடிவு செய்வோம்’ என்றார்.