சென்னை: தெலுங்கில் ‘மகாநடி’ என்ற படத்துக்காக தேசிய விருது பெற்றுள்ள கீர்த்தி சுரேஷ், தனது காதலர் ஆண்டனி
தட்டிலை திருமணம் செய்த பிறகு படங்களில் நடிப்பதை குறைத்துவிட்டார். தமிழில் அவர் நடித்த ‘ரிவால்வர் ரீட்டா’, ‘கண்ணிவெடி’ ஆகிய படங்கள் வெளியாகிறது. இந்நிலையில், விஜய் தேவரகொண்டா ஜோடியாக ‘ரௌடி ஜனார்த்தன்’ என்ற பான் இந்தியா படத்தில் நடிக்கிறார்.
இதை ரவி கிருஷ்ண கோலா இயக்க, தில் ராஜூ தயாரிக்கிறார். இப்படத்தில் ருக்மணி வசந்த் நடிப்பதாக கூறப்பட்டது. ஆனால், விஜய் தேவரகொண்டாவுடன் நெருக்கமான காதல் காட்சிகள் மற்றும் லிப்லாக் காட்சி இருக்கும் என்று இயக்குனர் தரப்பு சொன்னதை கேட்டு, அவ்வாறு நடிக்க மறுத்து, இப்படத்தில் இருந்து ருக்மணி வசந்த் விலகியதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. தற்போது அவருக்குப் பதிலாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.