கிஷோர் நடிக்கும் சஸ்பென்ஸ் திரில்லர்
சென்னை: ‘காளிதாஸ்’ (2019) திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இன்கிரடிபிள் புரொடக்ஷன்ஸ் தனது அடுத்த தயாரிப்பை அறிவித்துள்ளது. இது எதிர்பாராத திருப்பங்களை திரைக்கதையாய் கொண்ட சஸ்பென்ஸ் திரில்லர் படம். இப்படத்தை தயாரிக்கும் சிவநேசன் எஸ். இதில் இயக்குனராகவும் அறிமுகமாகிறார். இயக்குநர் கூறுகையில், “இந்த படத்தில் திரைக்கதையே ஹீரோ. ரசிகர்களை கடைசி வரை சஸ்பென்ஸில் வைத்திருக்கும் கதை...
பவிஷ் ஜோடியாக தெலுங்கு யூடியூப் வைரல் நடிகை
சென்னை: சினிமா மீடியா அன்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் தினேஷ் ராஜ், கிரியேட்டிவ் எண்டர்டெயினர்ஸ் அன்ட் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் சார்பில் ஜி.தனஞ்செயன் இணைந்து தயாரிக்கும் இன்னும் பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியது. தனுஷ் இயக்கத்தில் வெளியான ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகமான தனது பேரன் பவிஷ் ஹீரோவாக நடிக்கும் 2வது...
விஜே சித்து நடித்து இயக்கும் டயங்கரம்
சென்னை: வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் சார்பில் டாக்டர் ஐசரி கே.கணேஷ் தயாரிப்பில், டிஜிட்டல் திரை நட்சத்திரமும், ‘டிராகன்’ என்ற படத்தின் மூலம் ரசிகர்களிடம் பரிச்சயமானவருமான விஜே சித்து கதையின் நாயகனாக நடித்து இயக்கும் படம், ‘டயங்கரம்’. முக்கிய வேடங்களில் நட்டி நட்ராஜ், காளி வெங்கட், இளவரசு, நிதின் சத்யா, ஹர்ஷத்கான், ஆதித்யா கதிர் நடிக்கின்றனர்....
ப்ரோ கோட் தலைப்பை பயன்படுத்த தடை நடிகர் ரவி மோகனின் படத்திற்கு திடீர் சிக்கல்: டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி
புதுடெல்லி: மதுபான நிறுவனம் தொடர்ந்த வழக்கில், நடிகர் ரவி மோகன் தயாரிக்கும் புதிய திரைப்படத்தின் தலைப்புக்கு டெல்லி உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. பிரபல தமிழ் நடிகர் ரவி மோகன் தனது ‘ரவி மோகன் ஸ்டுடியோஸ்’ சார்பில் தயாரித்து, கார்த்திக் யோகி இயக்கத்தில் அவரே, எஸ்.ஜே.சூர்யா, அர்ஜூன் அசோகன் உள்ளிட்டோருடன் இணைந்து நடிக்கும் புதிய...
திருப்பதி கோயில் வளாகத்தில் தல என கூச்சல் போட்ட ரசிகர்கள் கடுமையாக எச்சரித்த அஜித்குமார்
சென்னை: கார் பந்தயங்களில் கலந்துகொண்டு வந்த அஜித் அவ்வப்போது சென்னைக்கு வருவார். இப்போது கார் பந்தய சீரிஸை முடித்துவிட்டார். கடந்த ஒரு சில நாட்களாகவே இந்தியாவிலேயே இருந்து வருகின்றார். அடுத்த கட்டமாக தனது புதிய படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்க இருக்கிறார். தன் குடும்பத்துடன் கேரளாவில் இருக்கும் கோயிலுக்கு சென்றிருந்த அஜித் தற்போது திருப்பதியில் சாமி...
ஆபாச ஏஐ வீடியோ வைரல் போலீசில் சிரஞ்சீவி புகார்
ஐதராபாத்: தனது ஆபாச மார்பிங் வீடியோக்கள் இணையத்தில் பரவுவதாக நடிகர் சிரஞ்சீவி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளது திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி, ஐதராபாத் சைபர் கிரைம் போலீசில் நேற்று புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, தனது புகைப்படங்களை மார்பிங் செய்து,...
இயக்குனராக மாறிய குணச்சித்திர நடிகை
எழுத்தாளரும், குணச்சித்திர நடிகையுமான செம்மலர் அன்னம் எழுதி இயக்கியுள்ள முதல் படம், ‘மயிலா’. நியூட்டன் சினிமா கம்பெனி தயாரிக்க, இயக்குனர் பா.ரஞ்சித் வழங்குகிறார். இப்படம் 55வது ரொட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில், பிரைட் பியூச்சர் என்ற பிரிவில், வரும் ஜனவரி 29 முதல் பிப்ரவரி 8ம் தேதி வரை காட்சிப்படுத்தப்படும் அனைத்து மொழி படங்களில் ஒன்றாக...
இந்தியாவின் எடிசனாக மாறிய மாதவன்
அறிவியல் மற்றும் விவசாய விஞ்ஞானி ஜி.டி.நாயுடுவின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகும் ‘ஜிடிஎன்’ என்ற படத்தில், இந்தியாவின் எடிசன் என்று கொண்டாடப்படும் ஜி.டி.நாயுடு வேடத்தில் மாதவன் நடிக்கிறார். இதற்கு முன்பு இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கையை சொன்ன ‘ராக்கெட்ரி: தி நம்பி எபெக்ட்’ என்ற படத்தில் அவர் நடித்திருந்தார். கோவையில் கட்டப்பட்டுள்ள தமிழ்நாட்டின் மிக நீளமான...
தீபிகாவுக்கு வில்லன் திடீர் ஆதரவு
இந்திய திரையுலகின் முன்னணி நடிகை தீபிகா படுகோன், படப்பிடிப்பில் தினமும் 8 மணி நேரம் மட்டுமே பணியாற்ற முடியும் என்று சொன்னது தொடர்பாக தனது கருத்தை பகிர்ந்துள்ளார், பாலிவுட் முன்னணி வில்லனும், குணச்சித்திர நடிகருமான நவாசுதீன் சித்திக். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘எனக்கு அதுபற்றி அதிகம் தெரியாது. அவரது கருத்தை நான் முழுமையாக வாசிக்கவில்லை. ஆனால்,...
