நண்பர்களின் காதலுக்கு கவிதையால் உதவிய பாடலாசிரியர்
சென்னை: சமீபத்தில் வெளியான ‘இந்திரா’ திரைப்படத்தில் வசந்த் ரவி மற்றும் மெஹ்ரீன் பிர்சதா இணைந்து நடித்தனர். இப்படம் மூலம் பாடலாசிரியராக அறிமுகமானவர் தேவ் சூர்யா. அவர் கூறியது: 2018ஆம் ஆண்டு கதாநாயகனாக ஒரு படத்தில் நடித்தேன். எனினும், அந்தப் படம் இதுவரை வெளியாகவில்லை. அந்த வகையில், நான் சினிமாவில் அதிகாரப்பூர்வமாக நுழைந்தது அந்தப் படத்தில் தான்...
ஓடும் ரயிலில் இருந்து கீழே குதித்த நடிகை: தலையில் பலத்த காயத்துடன் அட்மிட்
மும்பை: மும்பையில் படப்பிடிப்புக்குச் சென்றபோது, ஓடும் ரயிலில் இருந்து கீழே குதித்த பிரபல நடிகை கரிஷ்மா சர்மா, தலையில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பிரபல பாலிவுட் நடிகை கரிஷ்மா சர்மா நேற்று முன்தினம் மும்பையில் உள்ள சர்ச்சுகேட் பகுதிக்கு படப்பிடிப்புக்காக புடவை அணிந்து புறநகர் ரயிலில் பயணம் செய்துள்ளார். அவர் ரயிலில் ஏறிய பிறகு, ரயில்...
அரசியல் கதையில் விஜய் ஆண்டனி
சென்னை: விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன்ஸ் தயாரிப்பில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கும் ‘சக்தி திருமகன்’ படத்தின் முன் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இப்படம் விஜய் ஆண்டனியின் 25வது படம். அருவி படத்தின் இயக்குனர் அருண் பிரபு இயக்கியிருக்கிறார். இசையை விஜய் ஆண்டனியே அமைத்திருக்கிறார். ஷெல்லி ஒளிப்பதிவு செய்திருக்கிறார். கதாநாயகி திருப்தி அறிமுகமாகிறார். விஜய்...
புதிய கருத்தை சொல்லும் சரீரம்
சென்னை: ஜி.வி.பி. பிக்சர்ஸ் வழங்கும், இயக்குநர் ஜி.வி.பெருமாள் எழுதி, தயாரித்து, இயக்க, புதுமுகங்கள் தர்ஷன், சார்மி நடிப்பில், உருவாகியுள்ள திரைப்படம் ‘சரீரம்’. இப்படம் வரும் செப்டம்பர் 26ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. கடவுள் ஒவ்வொருவருக்கும் தந்த தனிக் கொடை தான் ‘சரீரம்’. அதன் அருமை யாருக்கும் புரிவதில்லை, தன் சரீரத்தை மாற்றிக்கொள்ளும் உரிமை எவருக்குமில்லை,...
செல்போன் அதிகம் பயன்படுத்தும் ஸ்ருதிஹாசன்
சமீபத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கி ரஜினிகாந்த் நடித்து வெளியான ‘கூலி’ படத்தில் பிரீத்தி என்ற கேரக்டரில் நடித்திருந்தார் ஸ்ருதிஹாசன். அடுத்ததாக மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகும் ‘டிரெயின்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். அதனைத் தொடர்ந்து பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் ‘சலார் 2’ படத்தில் நடிக்கவுள்ளார்....
ஹீரோவாகும் இசையமைப்பாளர் மகன்
தென்னிந்திய சினிமாவில் ஏராளமான படங்களுக்கு இசையமைத்தவர் வித்யாசாகர். கிட்டதட்ட 225 படங்களுக்கு மேல் இசை அமைத்துள்ளார். இவரை ‘மெலடி கிங்’ என ரசிகர்கள் அழைக்கின்றனர். கடைசியாக கடந்த ஜூலை மாதம் வெளியான ‘தேசிங்கு ராஜா 2’ படத்திற்கு இசையமைத்தார். தற்போது படங்களுக்கு இசையமைப்பதை விட கான்சர்ட் நிகழ்ச்சிகள் நடத்துவதில் ஆர்வம் காட்டி வருகிறார். வித்யாசாகருக்கு ஹர்ஷவர்தன்...
‘லோகா’ வெற்றியால் ‘காந்தா’வுக்கு சிக்கல்
ஸ்பிரிட் மீடியா மற்றும் வேஃபேரர் பிலிம்ஸ் சார்பில் ராணா டகுபதி மற்றும் துல்கர் சல்மான் இணைந்து தயாரிக்கும் படம் ‘காந்தா’. துல்கர் சல்மான், பாக்ய போர்ஸ் முன்னணி வேடத்தில் நடிக்கின்றனர். சமுத்திரக்கனி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். ஜானு சந்தர் இசை அமைக்கிறார். இப்படத்தின் அறிவிப்பு கடந்த 2023ம் ஆண்டு துல்கர் சல்மான் சினிமாவில் 13 ஆண்டுகளை...
தயாரிப்பாளராகும் சிம்ரன்
மும்பையில் பிறந்து வளர்ந்து தென்னிந்திய சினிமாவில் கொடி கட்டி பறந்தவர் நடிகை சிம்ரன். கடந்த 2003ம் ஆண்டு தீபக் பாகா என்பவரை திருமணம் செய்து இரண்டு ஆண் குழந்தைகளை பெற்றெடுத்தார். திருமணத்திற்கு பிறகு கேமியோ ரோல் அல்லது கெஸ்ட் அப்பியரன்ஸ்களில் மட்டும் நடித்து வந்தார். ஒரு சில படங்களில் ஒரு பாடலுக்கு மட்டுமே நடனம் ஆடியிருந்தார்....
மகளின் பிறந்தநாளுக்கு தீபிகா கொடுத்த பரிசு
இந்தியாவின் முன்னணி நடிகையான இருக்கும் தீபிகா படுகோன் தற்போது ஷாரூக்கானுடன் ‘கிங்’ ,மற்றும் சன் பிக்சர்ஸ் பிரமாண்ட தயாரிப்பில் அட்லி இயக்கும் பான் வேர்ல்ட் படத்தில் நடித்து வருகிறார். இந்தி நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து வந்த தீபிகா படுகோன் கடந்த 2018ம் ஆண்டு அவரை திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு கடந்தாண்டு செப்டம்பர் மாதம்...