பூங்கா படத்தில் நா.முத்துக்குமார் பாடல்கள்

சென்னை: ஜாகுவார் தங்கம், இயக்குனர் பாலசேகரன், நடிகர் ஜாவா சுந்தரேசன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டு, ‘பூங்கா’ படத்தின் இசையை, பூங்காவில் வெளியிட்டனர். அழகு மூவி மேக்கர்ஸ் உருவாக்கும் ‘பூங்கா’ படத்தில் கதாநாயகனாக கௌசிக் நடிக்கிறார். கதாநாயகியாக ஆரா நடிக்கிறார். கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - கே.பி.தனசேகர். ஒளிப்பதிவு - ஆர்.ஹெச்.அசோக், இசை...

ரேஸ் காரில் தமிழக அரசின் லோகோ ஏன்? அஜித் குமார் பேட்டி

By Karthik Raj
06 Oct 2025

பார்சிலோனா: தமிழ்நாடு அரசின் விளையாட்டுத்துறை இலச்சினையை தனது ரேஸ் காரில் பயன்படுத்துவது ஏன் என்பது குறித்து நடிகர் அஜித் குமார் பதிலளித்துள்ளார். சர்வதேச போட்டியின்போது நம்முடைய தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இலச்சினையை ரேஸிங் உபகரணங்கள் மற்றும் ஜெர்சியில் அஜித்குமார் பயன்படுத்தியதற்காக தமிழ்நாடு அரசு சார்பில் நன்றி தெரிவித்து மகிழ்வதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்...

கூட்ட நெரிசலில் சிக்கிய பிரியங்கா மோகன் அத்துமீறிய ரசிகர்கள்

By Karthik Raj
06 Oct 2025

ஐதராபாத்: தமிழில் சூர்யா ஜோடியாக ‘எதற்கும் துணிந்தவன்’, தனுஷ் ஜோடியாக ‘கேப்டன் மில்லர்’, சிவகார்த்திகேயனுடன் ‘டான்’, ‘டாக்டர்’ ஆகிய படங்களில் நடித்தவர் பிரியங்கா மோகன். தனுஷ் இயக்கிய ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ என்ற படத்தில் ஒரு பாடலுக்கு சிறப்பு நடனம் ஆடி இருந்த பிரியங்கா மோகன், தற்போது கவின் நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக...

விமானம் தாமதம் மாளவிகா மோகனன் கடும் கோபம்

By Karthik Raj
06 Oct 2025

சென்னை: விமான நிறுவனம் இண்டிகோவின் சேவையை விமர்சித்துள்ள மாளவிகா மோகனன், தனது எக்ஸ் தள பக்கத்தில், விமான தாமதம் குறித்து கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளார். அதில், “ஏன் இண்டிகோவின் பத்து விமானங்களில் ஒன்பது எப்போதுமே தாமதமாகவே புறப்படும்? பயணிகளை விமானத்தில் உட்கார வைக்கின்ற பெயரில், ஒரு மணி நேரத்துக்கும் மேல் இப்படி தாமதப்படுத்துவது என்ன விதமான...

ரிஷப் ஷெட்டி தந்த வாய்ப்பு சம்பத்ராம் நெகிழ்ச்சி

By Karthik Raj
06 Oct 2025

சென்னை: ‘காந்தாரா சாப்டர் 1’ படத்தை ரிஷப் ஷெட்டி இயக்கி நடிக்க, சம்பத்ராம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தின் மேக்கப்பிற்காக மட்டும் தினமும் இரண்டரை மணி நேரம் ஒதுக்க வேண்டியிருந்ததாக கூறியுள்ளார் சம்பத்ராம்,தொடர்ந்து அவர் கூறும்போது, “மாபெரும் வெற்றிப்படமாக அமைந்திருக்கிற ‘காந்தாரா சாப்டர் 1’-இல் நானும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன் என்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்....

சுந்தர்.சி இயக்கத்தில் விஷால்

By Karthik Raj
06 Oct 2025

சென்னை: சுந்தர்.சி இயக்கும் புதிய படத்தில் விஷால் நடிக்க உள்ளார். தற்போது நயன்தாரா நடிப்பில் ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்தை சுந்தர்.சி இயக்கி வருகிறார். இந்த பட ஷூட்டிங் முடிந்த பிறகு விஷால், சுந்தர்.சி இணையும் ஆக்‌ஷன் கதை கொண்ட படம் தொடங்கும் என சொல்லப்படுகிறது. ‘மதகஜராஜா’ படத்தின் வெற்றியை தொடர்ந்து இவர்கள் மீண்டும் இணைவது...

ராஷ்மிகா பட்டத்துக்கு ருக்மணி எதிர்ப்பு

By Muthukumar
06 Oct 2025

தமிழில் விஜய் சேதுபதி ஜோடியாக ‘ஏஸ்’, சிவகார்த்திகேயன் ஜோடியாக ‘மதராஸி’ ஆகிய படங்களில் நடித்திருந்த கன்னட நடிகை ருக்மணி வசந்த், தற்போது ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்துள்ள ‘காந்தாரா: சாப்டர் 1’ என்ற படத்துக்கு பிறகு ‘நேஷனல் கிரஷ்’ என்று அவரது ரசிகர்களால் புகழப்படுகிறார். 3 நாட்களில் 235 கோடி ரூபாய் வசூலித்துள்ள இப்படத்தின் மாபெரும்...

ஹீரோ மகனுக்கு வில்லனான அபிநய்

By Muthukumar
06 Oct 2025

மறைந்த முன்னாள் ஹீரோ ஆதித்தன் மகன் நிவாஸ் ஆதித்தன் ஹீரோவாகவும், ‘துள்ளுவதோ இளமை’ அபிநய் வில்லனாகவும் மற்றும் எஸ்தர், ஆத்விக் நடித்துள்ள படம், ‘கேம் ஆஃப் லோன்ஸ்’. ஜேஆர்ஜே புரொடக்‌ஷன்ஸ் சார்பில் ஜீவானந்தம் தயாரித்துள்ள இது, வரும் 17ம் தேதி தீபாவளியன்று திரைக்கு வருகிறது. சபரி ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜோ கோஸ்டா இசை அமைத்துள்ளார். பிரதீப்...

மமிதாவை தேர்வு செய்தது எப்படி?

By Muthukumar
06 Oct 2025

‘கோமாளி’ என்ற படத்தை இயக்கிய பிரதீப் ரங்கநாதன், பிறகு ‘லவ் டுடே’, ‘டிராகன்’ ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்தார். தற்போது மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில், இயக்குனர் சுதா கொங்கரா உதவியாளர் கீர்த்தீஸ்வரன் எழுதி இயக்கியுள்ள ‘ட்யூட்’ என்ற படத்தில் நடித்துள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கில் வரும் தீபாவளியன்று திரைக்கு வரும் இப்படத்தில் மமிதா பைஜூவை...

அரசியல் கேள்வியால் அலறிய காஜல்

By Muthukumar
06 Oct 2025

ஒருகாலத்தில் பிசியாக நடித்து வந்த காஜல் அகர்வால், திருமணமாகி ஒரு மகனுக்கு தாயான பிறகு சில தோல்விப் படங்களை அளித்ததன் மூலம் மார்க்கெட் இழந்த நடிகையாகி விட்டார். தமிழில் அவர் கடைசியாக நடித்திருந்த ‘இந்தியன் 2’ என்ற கமல்ஹாசனின் படத்தில், அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் இடம்பெறவில்லை. ‘இந்தியன்’ 3வது பாகத்துக்கான லீடில் இடம்பெற்றதை வைத்து, அவருக்கு...