தெலுங்கில் ‘உப்பெனா’ என்ற படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமான கிரித்தி ஷெட்டி அதனை தொடர்ந்து நானி, நாகசைதன்யா, நிதின், ராம் பொத்தினேனி, சர்வானந்த் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் ஜோடியாக நடித்து வந்தார். தற்போது தமிழில் கவனம் செலுத்தி வரும் கிரித்தி ஷெட்டி கார்த்தியுடன் ‘வா வாத்தியார்’, பிரதீப் ரங்கநாதன் ஜோடியாக ‘எல்ஐகே’ மற்றும் ரவி மோகனுடன் ‘ஜீனி’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
இந்த படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ள நிலையில் தெலுங்கை விட தற்போது தமிழில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். அதற்காக சென்னையிலேயே முகாமிட்டுதமிழ் இயக்குனர்களிடம் கதை கேட்டு வருகிறாராம். சோஷியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது போட்டோஷூட் செய்து அதன் போட்டோக்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
அந்தவகையில் சமீபத்தில் அவர் வெளியிட்டுள்ள போட்டோவில் சிவப்பு நிற உடையில் விதவிதமாக போஸ் கொடுத்துள்ளார். அதில், ”இந்த உலகில் சாத்தியமற்றது என எதுவும் இல்லை’ என கேப்ஷன் பதிவிட்டுள்ளார். தற்போது, கிரித்தி ஷெட்டியின் இந்த அழகிய போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
