Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

கிரித்தி ஷெட்டி படத்துக்கு சிக்கல்

சென்னை: லவ் டுடே மற்றும் டிராகன் படங்களின் வெற்றியை தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள படம் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி. இப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்குகிறார். பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக கிரித்தி ஷெட்டி நடித்துள்ளார். இப்படத்தில் மிஷ்கின், எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பிரதீப் ரங்கநாதனின் தந்தையாக சீமான் நடித்துள்ளார். இப்படத்தை நயன்தாராவின் ரெளடி பிக்சர்ஸ் நிறுவனமும், லலித் குமாரின் 7ஸ்கிரீன் நிறுவனமும் இணைந்து தயாரித்து வருகிறது. அனிருத் இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இது விக்னேஷ் சிவனின் 6-வது படமாகும்.

லவ் இன்சூரன்ஸ் கம்பெனி திரைப்படத்தை வருகிற செப்டம்பர் 18ம் தேதி ரிலீஸ் செய்ய உள்ளதாக அறிவித்து இருந்தனர். ஆனால் தற்போது அதன் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. எஸ்.ஜே.சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியிடப்பட்ட லவ் இன்சூரன்ஸ் கம்பெனியின் போஸ்டரில் ரிலீஸ் தேதி எதுவும் குறிப்பிடப்படவில்லை. இதனால் ரிலீஸ் தள்ளிப்போனது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இதற்கு முக்கிய காரணம், விஎஃப்எக்ஸ் பணிகள் இழுத்துக்கொண்டே செல்வதுதானாம். இடையில் இந்த படத்தின் படப்பிடிப்பு 6 மாதங்கள் நடைபெறவில்லை. பட்ஜெட் அதிகரித்துவிட்டதால் மேலும் செலவு செய்ய முடியாது என தயாரிப்பாளர் லலித்குமார் மறுத்தார். இதனாலேயே படப்பிடிப்பு நின்றது. பிறகு கணவருக்காக இந்த படத்தை நயன்தாரா தயாரித்து வருகிறார்.