சென்னை: தமிழிலும், தெலுங்கிலும் நடித்து வரும் கிரித்தி ஷெட்டியின் கைவசம் தமிழில் ‘வா வாத்தியார்’, ‘எல்ஐகே’, ‘ஜீனி’ ஆகிய படங்கள் இருக்கின்றன. இதில் ‘ஜீனி’ தவிர்த்து மற்ற இரு படங்கள் திரைக்கு வருகின்றன. கார்த்தியுடன் நடித்துள்ள ‘வா வாத்தியார்’ என்ற படம், வரும் டிசம்பர் 5ம் தேதி ரிலீசாகிறது.
பிரதீப் ரங்கநாதனுடன் நடித்துள்ள ‘எல்ஐகே’ என்ற படம், வரும் டிசம்பர் 18ம் தேதி திரைக்கு வருகிறது. இதை தொடர்ந்து ரவி ேமாகனுடன் நடித்துள்ள ‘ஜீனி’ என்ற படமும் வரும் டிசம்பர் மாதத்தில் வரும் என்று சொல்லப்படுகிறது. ஒருவேளை இப்படமும் ரிலீசாவது உறுதியானால், டிசம்பர் மாதத்தில் கிரித்தி ஷெட்டி நடித்த 3 படங்கள் அடுத்தடுத்து திரைக்கு வரும்.