Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

நடிகரின் கோயிலுக்கு நாளை கும்பாபிஷேகம்

திரைப்படங்கள், விளம்பரங்கள், வெப்தொடர்கள் என்று மீண்டும் பிசியாக நடித்து வரும் ‘பருத்திவீரன்’ சரவணன் அளித்துள்ள பேட்டியில், ‘கே.பாக்யராஜ் போல் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி நானே ஹீரோவாக நடிக்க வேண்டும் என்று முடிவு செய்து, சேலத்தில் இருந்து சென்னைக்கு வந்தேன். அப்போது நடிகை லட்சுமி மேடம், என்னை நடிகனாக மாறும்படி ஆலோசனை சொன்னார். அதை வேதவாக்காக எடுத்துக்கொண்ட பிறகே நான் ஹீரோவாக மாறினேன். சில படங்களில் நடித்துவிட்டு சொந்தப் படம் தயாரித்தேன். ‘தாயுமானவன்’ என்ற படத்தை இயக்கி இரட்டை வேடங்களில் நடித்தேன். சாதனை படைத்த பிறகே சாக வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.

நடிக்க வேண்டும், இயக்க வேண்டும், படம் தயாரிக்க வேண்டும். அதற்கு கடவுள் எனக்கு உதவி செய்கிறார். தற்போது நிறைய வாய்ப்புகள் வருகிறது. இனி ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்று சொல்ல மாட்டேன். யார் என்னை நம்பி அழுத்தமான கேரக்டர் கொடுத்தாலும் சரி, அதில் நான் 100 சதவீதம் கடுமையான உழைப்பை வெளிப்படுத்துவேன். சமீபத்தில் நான் நடித்த ‘சட்டமும் நீதியும்’ என்ற வெப்தொடரின் மூலம் மேலும் பிரபலமாகி இருக்கிறேன். தற்போது எனது சொந்த ஊரான சேலம் மாவட்டம் வட்டக்காடு பகுதியில், சரவணன் ஸ்டுடியோ ட்ரீம் பேக்டரி என்ற பெயரில் படப்பிடிப்பு தளத்தை கட்டியுள்ளேன். இயக்குனர் பாண்டிராஜ் திறந்து வைக்கிறார். மேலும், அங்கு கட்டப்பட்டுள்ள விநாயகர் கோயிலுக்கு நாளை கும்பாபிஷேகம் நடக்கிறது’ என்றார்.