சென்னை: பிரபு சாலமன் எழுதி இயக்கிய படம், ‘கும்கி 2’. ஒரு யானைக்கும், சிறுவனுக்கும் இடையிலான பாசப் போராட்டம்தான் கதை. 13 வருடங்களுக்கு முன்பு பிரபு சாலமன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, லட்சுமி மேனன் நடிப்பில் வெளியான படம், ‘கும்கி’. தற்போது அதன் அடுத்த பாகமாக ‘கும்கி 2’ படம் உருவாகியுள்ளது. இதில் மதி ஹீரோவாக அறிமுகம் ஆகிறார். அவரது கடின உழைப்பு மற்றும் பொறுமைக்கு மிகப்பெரிய அளவில் அங்கீகாரம் கிடைக்கும் என்று படக்குழு கூறியுள்ளது.
முக்கிய வேடத்தில் அர்ஜூன் தாஸ், ஷ்ரிதா ராவ், ஆண்ட்ரூஸ், ஆகாஷ், ஹரீஷ் பெராடி, நாத் நடித்துள்ளனர். நிவாஸ் கே.பிரசன்னா இசை அமைக்க, சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். புவன் எடிட்டிங் செய்ய, விஜய் தென்னரசு அரங்கம் அமைத்துள்ளார். பென் ஸ்டுடியோஸ், பென் மருதர் சினி எண்டர்டெயின்மெண்ட்ஸ் சார்பில் ஜெயந்திலால் காடா, தவல் காடா இணைந்து தயாரித்துள்ள இப்படம் விரைவில் திரைக்கு வருகிறது.