சென்னை: பென் ஸ்டுடியோஸ் சார்பில் டாக்டர் ஜெயந்தி லால் காடா, தவல் காடா தயாரிக்க, பிரபு சாலமன் எழுதி இயக்கியுள்ள படம், ‘கும்கி 2’. இதில் இடம்பெற்ற ‘பொத்தி பொத்தி உன்ன வச்சு’ என்ற பர்ஸ்ட் சிங்கிள் ரிலீசானது. பிரபு சாலமன் இயக்கத்தில் மிகப்பெரிய வெற்றிபெற்ற ‘கும்கி’ என்ற படம், 13 வருடங்களை கடந்தும் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. தற்போது அப்படத்தின் தொடர்ச்சியாக ‘கும்கி 2’ உருவாகியுள்ளது.
இளைஞனுக்கும், யானைக்கும் இடையிலான தூய்மையான, நிபந்தனையற்ற நட்பு மற்றும் அன்பை இப்படம் சொல்கிறது. மோகன் ராஜ் எழுதியிருந்த முதல் பாடலை நிவாஸ் கே.பிரசன்னா இசை அமைத்து பாடினார். எம்.சுகுமார் ஒளிப்பதிவு செய்ய, விஜய் தென்னரசு அரங்கம் அமைத்துள்ளார். புவன் எடிட்டிங் செய்துள்ளார். ஸ்டண்ட் சிவா சண்டைப் பயிற்சி அளித்துள்ளார். இதில் மதி, ஸ்ரீதா ராவ், ஆண்ட்ரூஸ், அர்ஜூன் தாஸ், ஆகாஷ், ஹரீஷ் பெராடி, ஸ்ரீநாத் நடித்துள்ளனர்.
