Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

லாப்ரடார் நாய் நடிக்கும் சிங்கா

சென்னை: ருத்ரம் சினிமாஸ் தயாரித்துள்ள படம், ‘சிங்கா’. மனிதர்களுக்கும், நாய்களுக்கும் இடையிலான ஆழமான அன்பையும், முறியாத பிணைப்பையும் கொண்டாடும் குடும்பக்கதையுடன் இப்படம் உருவாகியுள்ளது. இயக்குனர்கள் வசvந்த், ஏ.சற்குணம் ஆகியோரிடம் இணை இயக்குனராக பணியாற்றிய ராஜா துரை சிங்கம் இயக்கியுள்ளார்.

‘கயல்’ சந்திரன், சிஜா ரோஸ், மலையாள நடிகை மீனாட்சி, ஆதித்யா கதிர், மலையாள நடிகர் அரிஸ்டோ சுரேஷ் நடித்துள்ளனர். மனோஜ் சின்னசாமி இசை அமைக்க, அசோக் குமார் ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். ‘சிங்கா’ என்ற கேரக்டரில் ஒரு லாப்ரடார் நாய் நடித்துள்ளது.