Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

லேடி பிரபாஸ் ஆன நடிகை

திரையுலகில் முன்னணி இடத்தில் இருந்த விஜயசாந்தியை ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்றார்கள். மலையாளத்தில் மஞ்சு வாரியரையும், தமிழில் நயன்தாராவையும் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்கின்றனர். கன்னடத்தில் முன்னணி இடத்தில் இருந்த மாலாயை ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்றார்கள். தற்போது கன்னட ‘லேண்ட்லார்ட்’ படத்தில் நடிக்கும் ரச்சிதா ராமை ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்கின்றனர். ‘நேஷனல் கிரஷ்’ என்று ராஷ்மிகா மந்தனாவை சொன்னார்கள். இப்போது அந்த பட்டம் ருக்மணி வசந்துக்கு தரப்பட்டுள்ளது.

மாடலிங் மூலம் தனது திரையுலக வாழ்க்கையை தொடங்கிய நிதி ஷெட்டி, யஷ் நடித்த ‘கேஜிஎஃப்’, ‘கேஜிஎஃப் 2’ ஆகிய படங்களில் நடித்துவிட்டு, தெலுங்கில் நானி நடித்த ‘ஹிட்: தேர்ட் கேஸ்’ படத்திலும், தமிழில் விக்ரமுடன் ‘கோப்ரா’ படத்திலும் நடித்தார். அவர் நடித்துள்ள ‘தெலுசு கடா’ படம், வரும் 17ம் தேதி ரிலீசாகிறது. சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற நிதி ஷெட்டி, ரசிகர்கள் தன்னை ‘லேடி பிரபாஸ்’ என்று அழைப்பதாக சொன்னார். அதாவது, பிரபாஸை போல் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இல்லாமல் இருப்பதால், அவரை ‘லேடி பிரபாஸ்’ என்று சொல்கிறார்களாம்.