சென்னை: அண்மையில் வெளிவந்துள்ள ‘அனுக்கிரகன்’ படத்தில் ஒரு தந்தையாக சந்தோஷ் பாத்திரத்தில் நடித்துள்ள விஜய் கிருஷ்ணா பேமிலி ரசிகர்களிடம் நல்ல பெயர் பெற்று இருக்கிறார். விஜய் கிருஷ்ணா ‘நாடோடிகள்’ படத்தில் நடித்திருந்தார். அவர் கூறியது: ‘அனுக்கிரகன்’ படத்தின் கதையை இயக்குநர் சுந்தர் கிரிஷ் சொன்ன போதே இது குடும்பத்து பார்வையாளர்களிடம் வெற்றி பெறும் என்கிற நம்பிக்கை...
சென்னை: அண்மையில் வெளிவந்துள்ள ‘அனுக்கிரகன்’ படத்தில் ஒரு தந்தையாக சந்தோஷ் பாத்திரத்தில் நடித்துள்ள விஜய் கிருஷ்ணா பேமிலி ரசிகர்களிடம் நல்ல பெயர் பெற்று இருக்கிறார். விஜய் கிருஷ்ணா ‘நாடோடிகள்’ படத்தில் நடித்திருந்தார். அவர் கூறியது: ‘அனுக்கிரகன்’ படத்தின் கதையை இயக்குநர் சுந்தர் கிரிஷ் சொன்ன போதே இது குடும்பத்து பார்வையாளர்களிடம் வெற்றி பெறும் என்கிற நம்பிக்கை இருந்தது.படம் வெளியான பிறகு திரையரங்குகளுக்கு நாங்கள் செல்லும் இடமெல்லாம் படத்தில் வரும் தந்தை மகன் பாசத்தை நினைத்து பாராட்டுகிறார்கள்.எனது நடிப்பையும் பாராட்டுகிறார்கள். அப்படிக் கூறியவர்கள் பலரும் பெண்களாக இருக்கிறார்கள். இது எங்களுக்குப் பெருமையாக இருக்கிறது. இப்படம் வாழ்க்கையை மாற்றியிருக்கிறது. நான் யாருடைய பாணியும் இல்லாமல் எனக்கு என்று தனியான பாணியுடன் நடிக்கும் ஒரு நடிகனாக வரவே விரும்புகிறேன். அதை நோக்கியே என் பயணம் இருக்கிறது. இப்போது நான் நடித்துள்ள இரண்டு படங்கள் வெளியாக இருக்கின்றன.