Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல் - திரை விமர்சனம்

அமித் பார்கவ் நிறுவனத்தின் மேனேஜர் ஸ்ரீகாந்த், கோடீஸ்வரி சச்சு வீட்டின் மேனேஜர் பூஜிதா பொன்னாடாவுக்கு இடையே நட்பு ஏற்படுகிறது. தொழிலதிபரை திருமணம் செய்ய ஆசைப்படும் பூஜிதா பொன்னாடாவை பற்றி அறிந்த ஸ்ரீகாந்த், தன்னை அமித் பார்கவ் நிறுவனத்தின் முதலாளி என்று சொல்கிறார். அதுபோல், சச்சுவின் பங்களாவுக்கு சொந்தக்காரி என்று சொல்லி, ஸ்ரீகாந்தின் மனதில் பூஜிதா ெபான்னாடா குடியேறுகிறார். இருவரும் ஏமாற்றிக்கொண்டு பழக, இதன் விளைவுகளை சொல்கிறது படம்.

‘உன்னை நான் சந்தித்தேன்’, ‘உதய கீதம்’, ‘உயிரே உனக்காக’, ‘நினைவே ஒரு சங்கீதம்’ போன்ற வெள்ளிவிழா படங்களை இயக்கிய கே.ரங்கராஜ், நிகழ்காலத்தை மனதில் கொள்ளாமல், 1985களில் இருப்பதை போல் எழுதி இயக்கியுள்ளார். ரொம்ப ஜாலியான கேரக்டர் என்பதால், ஸ்ரீகாந்த் சிரமமின்றி நடித்து பாஸ் மார்க் வாங்குகிறார். பூஜிதா பொன்னாடா அழகாக இருக்கிறார், சிறப்பாக நடிக்கிறார். டெல்லி கணேஷ், கே.ஆர்.விஜயா, பரதன், நிமி இமானுவேல், அமித் பார்கவ், நம்பிராஜன், சச்சு, நளினி மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்திருக்கிறது.டி.தாமோதரனின் ஒளிப்பதிவு இயல்பு. ஆர்.கே.சுந்தரின் இசையும், பி.என்.சி.கிருஷ்ணாவின் வசனங்களும் பலம் சேர்த்துள்ளன. மற்றபடி பழைய கதையை, பழைய பாணியிலேயே படமாக்கி இருக்கின்றனர்.