சென்னை: நடிகர் மம்மூட்டி கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவு காரணமாக ஓய்வெடுத்துத் வந்த நிலையில் மீண்டும் சுறுசுறுப்பாக மோகன்லாலுடன் தான் இணைந்து நடித்து வரும் பேட்ரியாட் படத்தின் படப்பிடிப்பில் நடித்து வருகிறார். கொச்சியில் இதன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்றுமுன்தினம் கேரளாவில் குறிப்பிட்ட ஏழு மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதனை தொடர்ந்து மம்மூட்டி தனது வாக்கை செலுத்த விரும்பியபோது அவரால் இந்த தேர்தலில் வாக்கு செலுத்த முடியாமல் போனது. இதற்கு முன்னதாக மம்மூட்டி, கொச்சி பனம்பள்ளி நகரில் வசித்து வந்தார். அதன்பிறகு அவர் எர்ணாகுளத்திற்கு புதிய வீட்டிற்கு மாறினார். அதனால் பழைய வீட்டில் இருந்து தனது புதிய வீட்டின் முகவரிக்கு வாக்கு விவரங்களை மாற்ற தவறியதால், அவர் இந்த உள்ளாட்சித் தேர்தலில் ஓட்டளிக்க முடியாமல் போனது.
+
