Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

லோகேஷ் ஜோடியாக மிர்னா மேனன்

திரைக்கு வந்த ‘மாநகரம்’, ‘கைதி’, ‘மாஸ்டர்’, ‘விக்ரம்’, ‘கூலி’ ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ், விரைவில் ஹீரோவாக அறிமுகமாகிறார் என்று சில மாதங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியானது. அன்று முதல், இப்படத்தை யார் இயக்குகிறார்? ஹீரோயின் யார் என்பது குறித்து பலர் கேட்டு வந்தனர்.

கடந்த 2 ஆண்டுகளாக ‘கூலி’ படத்துக்கான பணிகளில் பிசியாக இருந்த லோகேஷ் கனகராஜ், தற்போது புதிய படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். ‘ராக்கி’, ‘சாணிக் காயிதம்’, ‘கேப்டன் மில்லர்’ ஆகிய படங்களை இயக்கியிருந்த அருண் மாதேஸ்வரன், லோகேஷ் கனகராஜ் நடிக்கும் படத்தை எழுதி இயக்குகிறார்.

லோகேஷ் கனகராஜ் ஜோடியாக, ‘ஜெயிலர்’ படத்தில் ரஜினிகாந்தின் மருமகளாக நடித்திருந்த மிர்னா மேனன் நடிக்க பேச்சுவார்த்தை நடக்கிறது. இதையடுத்து கார்த்தி நடிக்கும் ‘கைதி 2’ படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க திட்டமிட்டுள்ளார்.