Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

காதல் குறித்து தனுஷ் ஓபன் டாக்

சமீபத்தில் தனுஷ் இயக்கி, நடித்த ‘இட்லி கடை’ திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. அடுத்ததாக ‘போர் தொழில்’ இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் ஒரு படமும், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க கமிட்டாகி உள்ளார். தற்போது பாலிவுட்டின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் தனுஷ், கிரித்தி சனோன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘தேரே இஷ்க் மே’. வரும் நவம்பர் 28ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் புரமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

அந்தவகையில் இப்படத்தின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட தனுஷிடம் ”உங்களுக்கு காதல் என்றால் என்ன?” என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த தனுஷ், ”எனக்குத் தெரியாது” என சொல்லி சிரித்துவிட்டு, ”காதல் இன்னொரு மிகைப்படுத்தப்பட்ட உணர்வு. அதைத்தவிர வேறு எதுவும் இல்லை” என்றார். இதை கேட்டதும் அருகில் இருந்த கிரித்தி சனோன் உள்ளிட்ட பலரும் சிரிக்க, அரங்கத்தில் இருந்தவர்கள் விசிலடித்தனர். தொடர்ந்து பேசிய கிரித்தி சனோன், ”எனக்கு காலம் கடந்து நிற்கும் உண்மையான காதல் மேல் நம்பிக்கை இருக்கிறது” என்றார்.