Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

காதல் சம்பவத்தில் நாகேஷ் பேரன் கஜேஷ் நாகேஷ்

உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள படம், ‘மனசும் மனசும் சேர்ந்தாச்சு’. பருவ வயதில் ஏற்படும் காதல், சேர்ந்தாலும் அல்லது பிரிந்தாலும் அனைவருடைய நினைவிலும் நீங்காமல் இருக்கிறது. காற்றும், காதலும் ஒன்றே. அதுவே மனிதர்களை இயங்க வைக்கிறது. இதுபோன்ற கருத்துகளை சொல்லக்கூடிய இப்படத்தை எஸ்.அருள் பிரகாசம் எழுதி இயக்கியுள்ளார். நகைச்சுவை நடிகர் நாகேஷின் பேரனும், நடிகர் ஆனந்த் பாபுவின் மகனுமான கஜேஷ் நாகேஷ் ஹீரோவாக நடித்துள்ளார். மற்றும் ஷாஜிதா, கராத்தே ராஜா, சத்யன், அன்புச்செல்வி ஆகியோருடன் முக்கிய கேரக்டரில் எஸ்.அருள் பிரகாசம் நடித்துள்ளார்.

திருமலை கோவிந்தன் ஒளிப்பதிவு செய்ய, ஏ.நந்தகோபால் இசை அமைத்துள்ளார். கிரேசன் ஜோஸ்.எஃப் வசனம் எழுத, மாரி வீரராகவன் நடனப்பயிற்சி அளித்துள்ளார். வாலி லோகு சண்டைக்காட்சி அமைக்க, விஜய் எடிட்டிங் செய்துள்ளார். எஸ்ஏஎஃப் புரொடக்‌ஷன் சார்பில் எஸ்.அருள் பிரகாசம் தயாரித்துள்ளார். துல்கர் சல்மான், ராணா டகுபதி, சமுத்திரக்கனி, பாக்ய போர்ஸ் நடிப்பில் வெளியான ‘காந்தா’ என்ற படத்தில் நடித்தவர், பிஜேஷ் நாகேஷ். அவரது சகோதரர், கஜேஷ் நாகேஷ்.