Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

காதல் கதை மலையப்பன்

சென்னை: மலைப்பிரதேசங்களில் நடைபெறும் கருவறை காதல் கதை மலையப்பன் சன்லைட் மீடியா எழுமலை ஏ.எஸ். சந்திரசேகர் தயாரிப்பில், எஸ்.ஜே. சூரியாவின் உதவி இயக்குநர் குருச்சந்திரன் நடித்து இயக்கும் மலையப்பன் திரைப்படத்தின் கதை பெரு நகரங்களில் தொடங்கி கதாநாயகனின் வாழ்க்கை எப்படி கிராமங்களில் ஒரு உன்னதமான காதலோடு நகர்கிறது என்பதை சொல்கிறது.

சுவாமிநாதன் ராஜேஷ் இசைக்கு கவிஞர் காதல்மதி பாடல் எழுதுகிறார். படத்தின் மிகவும் முக்கியமான கதாபாத்திரங்களில் திருப்பாச்சி பட இயக்குர் பேரரசு, திருடா திருடி பட இயக்குநர் சுப்ரமணிய சிவா, சிட்டிசன் பட இயக்குநர் ஷரவணா சுப்பையா மற்றும் இன்னும் சில முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர்.