Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

காதல் கிசு கிசுவில் சிக்கிய தனுஷ் - மிருணாள் தாக்கூர்: சினிமா வட்டாரத்தில் பரபரப்பு

மும்பை: தனுஷ், மிருணாள் தாக்கூர் காதலிப்பதாக வெளியான தகவலால் சினிமா வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாலிவுட் நடிகையான மிருணாள் தாக்கூர், தெலுங்கில் ‘சீதா ராமம்’, ‘ஹாய் நன்னா’ படங்களிலும் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் நடித்த ‘சன் ஆஃப் சர்தார் 2’ ரிலீசானது. இந்த படம் தொடர்பான பார்ட்டியில் தனுஷும் கலந்துகொண்டார். மிருணாள் தாக்கூர் அழைப்பின் பேரில்தான் தனுஷ் வந்தார் என கூறப்படுகிறது. இந்த பார்ட்டியின்போது, மிருணாள் தாக்கூரின் கையைப் பிடித்தபடி உரிமையுடன் தனுஷ் பேசுகிறார். பதிலுக்கு அவரது கன்னத்தில் தனது கன்னத்தை நெருக்கியபடி மிருணாள் ஏதோ சொல்கிறார். இந்த வீடியோ வெளியாகி வைரலானது. இது தொடர்பாக ஆங்கில ஊடகத்தில் இருவருக்கும் இடையே காதல் என செய்தி வெளியானது. இதையடுத்து இந்த தகவல் சோஷியல் மீடியாவில் வேகமாக பரவி வைரலானது. இது தமிழ், இந்தி சினிமா வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த காதல் கிசு கிசு தகவல் குறித்து தனுஷோ மிருணாள் தாக்கூரோ எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.