Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

லக்கி பாஸ்கர் படப்பிடிப்பு தொடங்கியது

ஐதராபாத்: ‘சீதா ராமம்’, ‘கிங் ஆஃப் கொத்தா’ படங்களைத் தொடர்ந்து, துல்கர் சல்மான் இப்போது தெலுங்கில் திறமையான இயக்குநரான வெங்கி அட்லூரியுடன் ‘லக்கி பாஸ்கர்’ என்ற தனது அடுத்த படத்தை அறிவித்துள்ளார். சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் சார்பில் சூர்யதேவரா நாக வம்சி மற்றும் சாய் சௌஜன்யா இணைந்து படத்தை தயாரிக்கின்றனர். ‘வாத்தி’ படத்திற்குப் பிறகு இந்த பட நிறுவனம் வெங்கி அட்லூரியுடன் இரண்டாவது முறையாக இணைந்துள்ளனர். ‘லக்கி பாஸ்கர்’ படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. மீனாட்சி சவுத்ரி ஹீரோயினாக நடிக்கிறார். ‘ஒரு சாதாரண மனிதனின் அளவிட முடியாத உயரங்களை நோக்கிய அசாதாரண பயணம்’ என்ற கருப்பொருளைச் சுற்றி வருவதுதான் ‘லக்கி பாஸ்கர்’ படத்தின் ஒன்லைன். ஜி.வி.பிரகாஷ் குமார் படத்திற்கு இசையமைக்கிறார். நிமிஷ் ரவி ஒளிப்பதிவு செய்கிறார். நவின் நூலி படத்தொகுப்பு செய்கிறார். மேலும் படம் குறித்தான தகவல்கள் அடுத்தடுத்து அறிவிக்கப்படும்.