சென்னை: சிவகார்த்திகேயன் நடிப்பில் லட்சுமி மூவிஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் படம் மதராஸி. அனிருத் இசையமைத்துள்ளார். இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸுக்கு இது ஒரு கம்பேக் திரைப்படம் என்பதால், படத்தின் மீது அதிகப்படியான எதிர்ப்பார்ப்பு இருந்துவருகிறது. மதராஸி திரைப்படம் நாளை திரையில் வெளியாகவிருக்கும் நிலையில், படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே அதிகப்படியான வரவேற்பை பெற்றுள்ளது. படம் பற்றி சிவகார்த்திகேயன்...
சென்னை: சிவகார்த்திகேயன் நடிப்பில் லட்சுமி மூவிஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் படம் மதராஸி. அனிருத் இசையமைத்துள்ளார். இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸுக்கு இது ஒரு கம்பேக் திரைப்படம் என்பதால், படத்தின் மீது அதிகப்படியான எதிர்ப்பார்ப்பு இருந்துவருகிறது. மதராஸி திரைப்படம் நாளை திரையில் வெளியாகவிருக்கும் நிலையில், படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே அதிகப்படியான வரவேற்பை பெற்றுள்ளது.
படம் பற்றி சிவகார்த்திகேயன் கூறியது:
‘மதராஸி’ படத்திற்காக பல இடங்களுக்கு புரமோஷனுக்காக சென்றேன். இது ஒரு சிறந்த படம். மெகா ஸ்டார் சிரஞ்சீவி மற்றும் மகேஷ் பாபு போன்ற ஸ்டார்களுடன் பணியாற்றிய முருகதாஸ் சாருடன் இணைந்திருப்பதில் பெருமைப்படுகிறேன். ரெமோ, டாக்டர், டான், மாவீரன், அமரன் போன்ற படங்களுக்கு இதுவரை நீங்கள் (ரசிகர்கள்) அளித்த ஆதரவுக்கு நன்றி. அதேபோல தற்போது ‘மதராஸி’ படத்திற்கும் அதே அன்பையும் வரவேற்பையும் நீங்கள் வழங்குவீர்கள் என்று நம்புகிறேன்.
இந்த படத்துக்கு இசையமைப்பாளராக எனது உயிர் நண்பர் அனிருத் பணியாற்றி உள்ளார். அனிருத் என்றாலே ஹிட் மெஷின். அவர் கொடுக்கும் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ஆகின்றன. பிஜிஎம் இசை சும்மா தீயாக இருக்கும். அதனால் அந்த படமும் ஹிட் ஆகிறது. இந்த படத்தின் தயாரிப்பாளர் திருப்பதி பிரசாத் மிகவும் எளிய மனிதர். இவ்வாறு சிவகார்த்திகேயன் கூறினார்.