கடந்த 2015ல் வெளியான ‘பிரேமம்’ என்ற மலையாள படத்தில் அறிமுகமானவர், மடோனா செபாஸ்டியன். பிறகு தமிழில் விஜய் சேதுபதி நடித்த ‘காதலும் கடந்து போகும்’ என்ற படத்தில் அறிமுகமானார். தொடர்ந்து விஜய் சேதுபதியுடன் ‘கவண்’, ‘ஜூங்கா’ ஆகிய படங்களிலும், தனுஷ் இயக்கி நடித்த ‘ப.பாண்டி’, விக்ரம் பிரபுவுடன் ‘வானம் கொட்டட்டும்’, லோகேஷ் கனகராஜ் இயக்கிய ‘லியோ’, பிரபுதேவாவுடன் ‘ஜாலியோ ஜிம்கானா’ ஆகிய படங்களில் நடித்தார். தற்போது ‘அதிர்ஷ்டசாலி’, ‘ஹார்ட்டின்’, ‘பென்ஸ்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
மலையாளம் மற்றும் தமிழில் முதல் படத்திலேயே முத்திரை பதித்த மடோனா செபாஸ்டியன், நடிகை என்பதையும் தாண்டி அருமையான பின்னணி பாடகியாகவும் வலம் வருகிறார். நாள்தோறும் தனது சமூக வலைத்தளங்களில் சுறுசுறுப்பாக இயங்கி வரும் அவர், அவ்வப்போது போட்டோஷூட் செய்து, அந்த போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், அசத்தலான கிளாமர் உடையில் போஸ் கொடுத்துள்ளார். அதை பார்த்த ரசிகர்கள், அவரது போட்ேடாக்களை அதிகமாக பகிர்ந்து வருகின்றனர்.