Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

பென்ஸ் படத்தில் இணைந்தார் மடோனா

சென்னை: பாக்யராஜ் கண்ணன் இயக்கும் படம், ‘பென்ஸ்’. இதன் கதையை, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் எழுதியுள்ளார். லோகேஷ் கனகராஜின் ‘எல்சியு’ படமான இதில், ராகவா லாரன்ஸ், நிவின் பாலி, சம்யுக்தா மேனன் நடிக்கின்றனர். பேஷன் ஸ்டூடியோஸ் சுதன் சுந்தரம், லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்குவாட், ஜெகதீஷ் பழனிசாமியின் தி ரூட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.

நாட்டின் பல்வேறு முக்கிய நகரங்களிலும், ஐக்கிய அரபு எமிரேட்ஸிலும் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் மடோனா செபாஸ்டியன் இப்படத்தில் நடிக்க இருக்கிறார். லோகேஷின் ‘எல்சியு’ படமான ‘லியோ’வில் நடித்திருந்தார் மடோனா. அதில் அவர் கதாபாத்திரம் இறந்துவிடும். இப்போது இதிலும் இணைந்துள்ளார் என்பதால் ‘லியோ’வுக்கு முந்தைய கதையாக இது இருக்கலாம் என்கிறார்கள். இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.