Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

இன்று மெட்ராஸ் டே: டாக்குமென்ட்ரி வெளியிட்ட இயக்குனர்

சென்னை: இன்று மெட்ராஸ் டே கொண்டாடுவதை முன்னிட்டு ‘மெட்ராஸ் தி கனெக்ட்டிங் த்ரெட்’ என்ற மினி ஆவணப் படத்தை இயக்குனர் ரமேஷ் யந்த்ரா வெளியிட்டுள்ளார். இந்த ஆவணப் படத்தை மில்லியன் ஸ்டுடியோ தயாரித்துள்ளது. சென்னையில் பிறந்து உலக அளவில் சாதித்து, இப்போது பல்வேறு நாடுகளில் வசிக்கும் விஐபிக்கள் பற்றிய தொகுப்பாக இந்த ஆவணப் படம் இடம்பெற்றுள்ளது.

இது குறித்து இயக்குனர் ரமேஷ் யந்த்ரா கூறும்போது, ‘‘இது ஐடியாவாக தோன்றியதும் மினி ஆவணமாக இயக்கினேன். சென்னையில் பிறந்து சாதித்த பலரையும் பேட்டி கண்டு முழுநீள ஆவணப் படம் உருவாக்க திட்டமிட்டுள்ளேன். இந்த ஆவணப் படத்தை யாந்த்ரா ஸ்டுடியோ யூடியூப் சேனலில் பார்க்கலாம்’’ என்றார். ரமேஷ் யந்த்ரா, ‘டிராக்டர்’ என்ற தமிழ் படத்தை இயக்கியுள்ளார். இது விரைவில் திரைக்கு வர உள்ளது.