Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

மதுரை-16: விமர்சனம்

மதுரை 16 என்ற பின்கோடு அரசரடி பகுதியை குறிப்பதால், படத்துக்கு இப்பெயர் சூட்டப்பட்டுள்ளது. மதுரை மீன் மார்க்கெட்டில் வேலை செய்யும் இருவர், ஆளும் கட்சி எம்எல்ஏவை கொல்கின்றனர். அவர்கள் ஏன் எம்எல்ஏவை கொன்றனர்? பிறகு ஏன் அசிஸ்டெண்ட் போலீஸ் கமிஷனரையும் கொல்ல முயற்சிக்கின்றனர்? நண்பர்களை வன்முறைக்கு தூண்டிய சம்பவம் என்ன என்பது மீதி கதை. ஜெரோம் விஜய், ரிஷி, துருவன், விமல் ராஜ் ஆகிய இளைஞர்கள், புதுமுகம் என்றே சொல்ல முடியாத அளவுக்கு தோற்றத்திலும், உடல் மொழியிலும், துறுதுறுப்பான நடிப்பிலும் மதுரைக்கார இளைஞர்களாகவே வாழ்ந்துள்ளனர்.

விமல் ராஜ் சித்திரவதை செய்யப்படும்போது அனுதாபத்தை அள்ளுகிறார். எம்எல்ஏவாக நடித்துள்ள பி.பிரசன்னா, வில்லத்தனத்தில் வித்தியாசம் காட்டியுள்ளார். மதுரை பிரசன்னாவின் தோற்றமும், நடிப்பும் கச்சிதம். நிவேதா தினேஷ் மதுரை பெண்ணாகவே மாறியுள்ளார். ரிஸ்வான் கானின் ஒளிப்பதிவு ரசிக்கலாம். சந்தோஷ் ஆறுமுகத்தின் பின்னணி இசை விறுவிறு. பிற்பகுதி சுவாரஸ்யமாக இருக்கிறது. நுங்கம்பாக்கம் சுவாதி கொலை வழக்கை நினைவூட்டுவது போல் சில காட்சிகள் இடம்பெற்றுள்ளன. வழக்கமான பழிவாங்கும் கதையை ஜான் தாமஸ் இயக்கியுள்ளார். திரைக்கதையில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம்.