நைரோபி, செப்.4: மகேஷ் பாபு நடிப்பில் ராஜமவுலி இயக்கும் படத்துக்கு கென்யாவில் படப்பிடிப்பு நடக்கிறது. 1000 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமான சர்வதேசப் படமாக இது உருவாகிறது. ராஜமௌலி கென்யாவிலிருந்தே மார்க்கெட்டிங் செய்யத் தொடங்கிவிட்டார். சமீபத்தில் ராஜமௌலி, ‘எஸ்எஸ்எம்பி 29’ (தற்காலிக தலைப்பு) படக்குழுவினருடன் கென்ய நாட்டு அமைச்சரவைச் செயலாளர் முசாலியா முதவாடியை சந்தித்தார். ராஜமௌலி தன்...
நைரோபி, செப்.4: மகேஷ் பாபு நடிப்பில் ராஜமவுலி இயக்கும் படத்துக்கு கென்யாவில் படப்பிடிப்பு நடக்கிறது. 1000 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமான சர்வதேசப் படமாக இது உருவாகிறது. ராஜமௌலி கென்யாவிலிருந்தே மார்க்கெட்டிங் செய்யத் தொடங்கிவிட்டார். சமீபத்தில் ராஜமௌலி, ‘எஸ்எஸ்எம்பி 29’ (தற்காலிக தலைப்பு) படக்குழுவினருடன் கென்ய நாட்டு அமைச்சரவைச் செயலாளர் முசாலியா முதவாடியை சந்தித்தார். ராஜமௌலி தன் படத்தின் சிறப்பம்சங்கள், படமாக்கப்படும் விதம், வெளியீட்டுத் திட்டம் ஆகியவற்றைப் பற்றி அவரிடம் விளக்கினார். முசாலியா ராஜமௌலியைப் பாராட்டி சமூக ஊடகங்களில் பதிவிட்டார். உலகின் சிறந்த இயக்குனர்களில் ராஜமௌலி ஒருவர் என்று புகழ்ந்தார்.
அவர் போட்டுள்ள பதிவில், ‘‘உலகின் சிறந்த இயக்குனர்களில் ஒருவரான ராஜமௌலிக்கு கென்யா மேடையாக அமைந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் தனது 120 பேர் கொண்ட குழுவுடன் தனது படத்திற்காக கென்யாவைத் தேர்ந்தெடுத்துள்ளார். ஆசியாவின் மிகப் பெரிய படமாக இது இருக்கும். 120 நாடுகளில் பிரம்மாண்டமாக வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்’’ என்று முசாலியா டிவிட்டரில் குறிப்பிட்டார். கென்யா சுற்றுலாத்துறையிடன் இணைந்து படத்தை புரோமோஷன் ெசய்யும் ஒப்பந்தத்தில் ராஜமவுலியும் முசாலியாவும் கையெழுத்திட்டனர்.