Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

மலைக்காவுடன் ராஷ்மிகா போட்டி நடனம்

பாலிவுட் மற்றும் டோலிவுட்டில் தனது அதிவேக கவர்ச்சி நடனத்துக்காக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர், மலைக்கா அரோரா. தற்போது அவர் ஒரு புதிய பாடல் காட்சியில் நடனமாடி அசத்தியுள்ளார். வரும் தீபாவளி பண்டிகைக்கு திரைக்கு வரும் ‘தம்மா’ என்ற இந்தி படத்தில் இருந்து வெளியாகியுள்ள ‘பாய்சன் பேபி’ என்ற பாடல் காட்சியில் அவர் இடம்பெற்றுள்ளார். நேற்று முன்தினம் வெளியான இப்பாடலில் மலைக்கா அரோராவுடன் இணைந்து ராஷ்மிகா மந்தனாவும் அதிவேகமாக நடனமாடியுள்ளார். தற்போது இப்பாடல் வைரலாகி வருகிறது.

ஆதித்யா சர்போத்தர் இயக்க, ஆயுஷ்மான் குரானா ஹீரோவாக நடித்துள்ளார். முக்கிய வேடங்களில் நவாசுதீன் சித்திக், பரேஷ் ராவல் நடித்துள்ளனர். இந்தி படங்களில் நடிக்க அதிக கவனம் செலுத்தி வரும் ராஷ்மிகா மந்தனா, கோடிக்கணக்கான ரூபாய் சம்பாதிப்பதிலும், ஒவ்வொரு மாநிலத்திலும் சொந்தமாக பங்களா வாங்குவதிலும் தீவிரம் காட்டுகிறார். அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் அவரும், விஜய் தேவரகொண்டாவும் காதல் திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளதால், தற்போது ஒப்பந்தமான படங்களின் ஷூட்டிங்கை அவசர, அவசரமாக முடித்து வருகிறார்.