Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

மலைக்காவுக்கு முன்னாள் காதலர் வாழ்த்து

இந்தி முன்னணி நடிகை மலைக்கா அரோரா, இந்தி நடிகர் அர்பாஸ்கானை காதல் திருமணம் செய்தார். அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்றார். 2018ல் இந்தி நடிகரும், போனி கபூரின் மகனும், தன்னை விட 12 வயது குறைந்தவருமான அர்ஜூன் கபூரை காதலித்த மலைக்கா அரோரா, திருமணம் செய்துகொள்ளாமல் அவருடன் வாழ்ந்து வந்தார். கடந்த ஆண்டு கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்தாலும், தங்களது நட்பை தொடர்ந்து வந்தனர். ‘ஹோம்பவுண்ட்’ என்ற படத்தின் பிரீமியர் காட்சியில் மலைக்கா அரோராவும், அர்ஜூன் கபூரும் கட்டிப்பிடித்து அன்பை பரிமாறிக்கொண்டனர்.

சில நாட்களுக்கு முன்பு மலைக்கா அரோரா தனது 52வது பிறந்தநாளை கொண்டாடினார். அப்போது அர்ஜூன் கபூர் பாரீசில் இருந்த போட்டோவை பகிர்ந்து, ‘பிறந்தநாள் வாழ்த்துகள். தொடர்ந்து உயரத்துக்கு செல்லுங்கள், சிரித்துக்கொண்டே இருங்கள், எப்போதும் தேடிக்கொண்டே இருங்கள்’ என்று வாழ்த்தி பதிவிட்டுள்ளார். மலைக்கா அரோரா வெளிப்படையாக பேசும் வழக்கம் கொண்டவர். சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு ரியாலிட்டி ஷோவில் பேசிய அவர், ‘முழுமையாக சரில்லாத ஆண்களை எனக்கு பிடிக்கும். ஒருவகையில் எல்லாவற்றையும் சரியாக செய்பவர்கள் அல்ல. மென்மையாக இருப்பவர்கள் அல்ல. மிகவும் சரசமாடும் மற்றும் நன்றாக முத்தமிடும் ஆண்களை எனக்கு பிடிக்கும்’ என்று பரபரப்பாக பேசியிருந்தார்.