தமிழில் ‘பேட்ட’, ‘மாஸ்டர்’ ஆகிய படங்களில் நடித்தவர் மாளவிகா மோகனன். தொடர்ந்து தனுஷுடன் ‘மாறன்’ விக்ரமுடன் சேர்ந்து நடித்த ‘தங்கலான்’ ஆகிய படங்கள் எதிர்பார்த்த அளவு அவருக்கு வெற்றியைத் தரவில்லை. தற்போது பிரபாஸ் நடிக்கும் ‘தி ராஜா சாப்’ என்ற பான் இந்தியா படத்திலும், பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகும் ‘சர்தார் 2’ ஆகிய...
தமிழில் ‘பேட்ட’, ‘மாஸ்டர்’ ஆகிய படங்களில் நடித்தவர் மாளவிகா மோகனன். தொடர்ந்து தனுஷுடன் ‘மாறன்’ விக்ரமுடன் சேர்ந்து நடித்த ‘தங்கலான்’ ஆகிய படங்கள் எதிர்பார்த்த அளவு அவருக்கு வெற்றியைத் தரவில்லை. தற்போது பிரபாஸ் நடிக்கும் ‘தி ராஜா சாப்’ என்ற பான் இந்தியா படத்திலும், பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகும் ‘சர்தார் 2’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான ‘ஹிருதயபூர்வம்’ என்ற மலையாள படத்திலும் கதாநாயகியாக நடித்துள்ளார். மலையாள திரையுலகை சேர்ந்த ஒளிப்பதிவாளர் கே.யு.மோகனன் என்பவரின் மகளான மாளவிகா மோகனன் கதாநாயகியாக அறிமுகமானது துல்கர் சல்மான் ஜோடியாக ‘பட்டம் போலே’ என்ற படத்தில் தான். இந்த படத்தில் நடிப்பதற்கு அவர் முதலில் ஆடிஷன் செய்துதான் தேர்வு செய்யப்பட்டார். அவரை நடிகர் மம்மூட்டி தான் ஆடிஷன் செய்துள்ளார். அப்போது எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து தனது நினைவுகளை பகிர்ந்துள்ளார் மாளவிகா மோகனன். அவர் வெளியிட்டுள்ள பதிவில், ”என்னுடைய முதல் ஆடிஷன் இதுதான்.
ஒரு ஜாம்பவான் நடிகர் தன்னை ஆடிஷன் செய்து போட்டோவும் எடுக்கும் வாய்ப்பு யாருக்காவது கிடைக்குமா? ஆனால் எனக்கு நடந்தது. ‘பட்டம் போலே’ படத்திற்கு கதாநாயகி தேடிகொண்டிருந்தனர். அப்போது ஒரு படப்பிடிப்பு தளத்திற்கு என்னை வரவழைத்து மம்மூட்டி என்னை போட்டோ எடுத்தார். மம்மூட்டியும், துல்கர் சல்மான் இருவரும் சேர்ந்து என்னை அந்த படத்தில் அறிமுகம் செய்தார்கள். அவர்தான் அந்த படத்தில் என்னை நடிப்பதற்கு ஓகே சொன்னார்” என்று கூறியுள்ளார்.