Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

நீச்சல் உடையில் கலக்கிய மாளவிகா

முன்னாள் ஹீரோயின் மாளவிகா, தற்போது தனது சோஷியல் மீடியாவில் வெளியிட்டு வரும் படுகவர்ச்சியான போட்டோக்கள் இணையதளங்களை பெருமளவு ஆக்கிரமித்து, அவரது ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் மூலமாக வைரலாக்கப்பட்டு வருகிறது. தமிழில் சுந்தர்.சி இயக்கிய ‘உன்னைத்தேடி’ என்ற படத்தில் நடித்த அவர், அப்படம் ஹிட்டான நிலையில் தமிழில் தொடர்ந்து பல படங்களில் ஒப்பந்தமாகி நடித்து, தனக்கென்று ஒரு தனி ரசிகர்கள் பட்டாளத்ைத உருவாக்கினார். இந்நிலையில், திடீரென்று அவருக்கு புதுப்பட வாய்ப்புகள் குறைந்தது. மற்ற ெமாழிப் படங்களில் அதிக கவனம் செலுத்த ஆரம்பித்த அவர், மும்பை தொழிலதிபர் சுமேஷ் மேனன் என்பவரை திருமணம் செய்துகொண்டு மும்பையில் செட்டிலானார். தற்போது மீண்டும் திரைத்துறையில் கவனம் செலுத்த வந்துள்ள அவர், ‘கோல்மால்’ என்ற படத்தில் நடித்துள்ளார்.

மிர்ச்சி சிவா, ஜீவா நடித்துள்ள இப்படம் ஏராளமான பிரச்னைகளால் திரைக்கு வரவில்லை. நாள்தோறும் தனது சோஷியல் மீடியாவில் சுறுசுறுப்பாக இயங்கி வரும் மாளவிகா, நீச்சல் உடையில் நடுக்கடலில் ஆட்டம் போட்ட போட்டோக்களை பகிர்ந்துள்ளார். மேலும், தான் தங்கியிருக்கும் பிரபல நட்சத்திர ஓட்டலில் அமைந்துள்ள நீச்சல் குளத்தில் இருந்து எழுந்து நடந்து வரும் கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டுள்ளார். அது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. மாளவிகாவுக்கு திருமணமாகி 18 ஆண்டுகள் ஆகிறது. ஆரவ் என்ற மகனும், ஆன்யா என்ற மகளும் இருக்கின்றனர். இந்நிலையில், கடுமையான உடற்பயிற்சிகளின் மூலம் தனது உடலமைப்பை கட்டுக்குள் வைத்திருக்கும் அவர், நீச்சல் உடையில் தோன்றும் சில போட்டோக்களின் மூலமாக, அதிக தன்னம்பிக்கை கொண்டவராக தன்னை வெளிப்படுத்தி வருகிறார்.