சென்னை: ‘லோக்கல் சரக்கு’, ‘கடைசி தோட்டா’ ஆகிய படங்களுக்கு இசையமைத்து பாடல்களை ஹிட் பண்ணியவர் இசையமைப்பாளர் சுவாமிநாதன் ராஜேஷ். இதனை அடுத்து ‘கண்ணோரமே’ என்ற இசை ஆல்பம் வெளியிட்டார். அதுவும் டிரெண்டிங்கில் உள்ளது. இவரின் பாடல்கள் வெற்றி பெற்றதை பார்த்த இயக்குனர் குரு சந்திரன் கதையின் நாயகனாக நடித்து இயக்கும் ‘மலையப்பன்’ படத்திற்கு இவரை இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்துள்ளார். இந்த படத்திற்காக காதல்மதி எழுதிய ‘வேஷங்கட்டிக்கிட்டு’ என்ற பாடலை பிரசன்னா பாட தனது இசையில் வீரமிக்க பாடலாக பதிவு செய்தார்.
+