Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

மலேசியா கார் ரேஸ் போட்டியில் அஜித்துடன் இணைகிறார் நரேன் கார்த்திகேயன்

சென்னை: மலேசியாவில் வருகின்ற டிசம்பர் மாதம் நடக்கவுள்ள ‘ஆசிய லீ மான்ஸ் தொடர்’ கார் ரேஸ் போட்டியில் அஜித்குமார் அணியுடன் இந்தியாவின் முதல் எஃப் 1 ரேஸ் வீரரான நரேன் கார்த்திகேயன் இணைந்துள்ளார். இந்த போட்டியில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் அஜித்குமார் அணி பங்கேற்கிறது. நரேன் கார்த்திகேயன் இணைந்தது குறித்து அஜித் கூறுகையில், “எங்கள் அணியில் நரேன் இணைந்திருப்பது உண்மையிலேயே ஒரு பாக்கியம்.

அவருடன் இணைந்து போட்டியிடுவது ஒரு மரியாதை. மேலும் ஸ்பெஷலானது” என்றார். இதையடுத்து நரேன் கார்த்திகேயன் கூறுகையில், “எனக்கு அஜித்தை பல வருடங்களாகத் தெரியும், அவர் இப்போது முழு மூச்சாக கார் ரேஸில் கலந்து கொண்டிருப்பது மகிழ்ச்சி. வரவிருக்கும் ஆசிய லீ மான்ஸ் தொடரில் அவருடன் இணைந்து பணியாற்றுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன், மேலும் ஒரு அற்புதமான பயணத்தை எதிர்நோக்குகிறேன்” என்றார்.